தொலைத்தொடர்புக் கோபுரத்தின் மீது ஏறி பிரதேச சபை உத்தியோகத்தர் ஆர்ப்பாட்டம்!
தனது மோட்டார் சைக்கிளின் எரிபொருள் செலவுக்கான பணத்தையும் சம்பளத்தையும் அதிகரிக்குமாறு கோரி அம்பாறை மாவட்டத்தின் தமண பிரதேச சபை உத்தி யோகத்தர் ஒருவர் இங்குராணை பிரதேச தனியார் தொ லைத்தொடர்புக் கோபுரத்தின் மீது ஏறி இன்று காலையி லிருந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
வருமானவரி அறவீடு செய்வதற்காக மோட்டார் சைக்கிள் எரிபொருளுக்கு வழங்கும் பணத்தை 3,500 ரூபாவிலிருந்து அதிகரிக்குமாறும் தனது சம்பளத்தை அதிகரிக்குமாறும் தமண பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தர் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமண பிரதேச சபையின் வருமான வரி உத்தியோகத்தராக கடமையாற்றும் 45 வயதுடைய ஒருவரே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுவருகின்றார்.
0 comments :
Post a Comment