Tuesday, October 8, 2013

அமைதிக்கு குந்தகம் விளைவிப்போருக்கு பாதுகாப்பு வழங்குவதா? சர்வதேச சட்டத்தின் கீழும் அதற்கு அங்கீகாரம் இல்லை!

கடந்த சனிக்கிழமை மாத்தறை நகரில் இடம்பெற்ற ஐக்கிய தேசிய கட்சி மோதல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீதி போக்குவரத்தில் தடைகள் ஏற்பட கூடிய வகையில் செயற்படுவோருக்கு பொலிஸாரினால் பாதுகாப்பு வழங்கப் படமாட்டாது என பதில் பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரும் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

மாத்தறையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸார் விசார ணைகளை மேற்கொள்கின்றனர். 25 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீண்டும் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை தொடர்ந்து எதிர்வரும் 14ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பலர் பொலிஸார் மீது குற்றஞ்சாட்டியிருந்தனர். இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கென பொலிஸ்மா அதிபரினால் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் காமினி நவரட்ன தலைமை யிலான குழுவினர் நியமிக்கப்பட்டனர்.

இது ஒரே அரசியல் கட்சியின் இரு வேறுப்பட்ட குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலாகும். பொலிஸார் வீதி போக்குவரத்தில் தடைகள் ஏற்பட கூடியவாறு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவோருக்கு பாதுகாப்பு வழங்குவதில்லை. இந்த ஆர்ப்பாட்டமும் வீதி போக்குவரத்தில் தடை ஏற்பட கூடியவாறே இடம்பெற்றது. இதனை ஊடகங்கள் மூலம் எமக்கு காணமுடிந்தது.

வீதி போக்குவரத்து தடையேற்பட கூடிய வகையில் எந்த தரப்பினருக்கும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட உரிமையில்லை. இதற்கு சர்வதேச சட்டத்தின் கீழும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை. இவ்வாறான ஆர்ப்பாட்டங்களுக்கு பாதுகாப்பு வழங்குவது பொலிஸாரின் பொறுப்பல்ல. அமைதிக்கு குந்தகம் ஏற்படுவதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று அமைதியை நிலைநாட்ட நடவடிக்கை எடுத்தமை மாத்திரமன்றி விசாரணை களையும் மேற்கொண்டனர்.

விசாரணைகளுக்கமையவே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ் வாறான சம்பவங்கள் மீள ஏற்படாதிருக்க தேவையான அனைத்து நடவடிக்கை களையும் பொலிஸார் மேற்கொண்டனர். பொலிஸார் மீது குற்றஞ்சாட்டும் பட்சத்தில் அது தொடர்பில் விசாரணைகளை நடாத்த நாம் தயாராகவுள்ளோம் என அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com