Tuesday, October 15, 2013

ஜெயித்த தமிழரசுக் கட்சியும் மண்டியிட்ட மண்டையன் குழுவும்! பதவியேற்பை சொதப்பி வெற்றி கண்டது யார்? சித்திரன்

பிரிக்கப்பட்ட வடமாகாணசபைத் தேர்தலை மக்கள் ஆதரவுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு வெற்றிகொண்டது. வெற்றிக் கொண்டாட்டங்கள் முடிவடைவதற்கு முன்னரே உட்கட்சி மோதல் வலுப்பெற்றது. மகிந்தவின் சால்வைக்குள் புகுந்து நிற்கும் தமிழரசுக் கட்சிக்கும் இந்திய றோவின் கூலிகளான மண்டையன் குழு (ஈபிஆர்எல்எப்), ரெலோ, புளொட் ஆகிய கட்சிகளுக்கிடையில் அமைச்சர் பதவி விவகாரம் .சூடுபிடித்தது.

தனது தம்பி கடைசியா வந்தாலும் பறவாயில்லை அவருக்கு அமைச்சு கொடுக்க வேண்டும் என மண்டையன் குழுவும், ரெலோ இரண்டாக பிளவுபட்ட நிலையில் கருத்துக்களை வெளியிட்டும், புளொட் தமக்கு அமைச்சு தரவில்லை எனவும் முரண்பட்டுக் கொண்டு கடந்த 11ம் திகதி நடந்த பதவியேற்பை புறக்கணித்தது.

முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஜனாதிபதியின் சால்வைக்குள் புகுந்து சத்தியப் பிரமாணம் செய்த போது நீங்கள் எல்லாம் எங்க அய்யா போனீங்கள்? புளொட் சித்தார்த்தன் அதற்கு தனி விளக்கம் கொடுத்தார். தான் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் இருப்பதால் தலைமைக்கு கட்டுப்பட்டும் ஒற்றுமையைக் குலைக்க கூடாது எனவும் கருதி ஜனாதிபதியின்ர முன்னிலையில நடந்த சத்தியபிரமாண நிகழ்வுக்கு போனாராம். இப்ப தலைமை எங்க? அவர் சொன்ன ஒற்றுமை எங்க? என்னய்யா பம்மாத்து உங்களுக்கு அமைச்சு தராட்டால் ஒற்றுமை தேவையில்லை. தலைமை தேவையில்லை. மக்களின் விருப்பை எதிர்க்கலாம். இது உங்கட சுயநலத்தை வெளிப்படுத்த போதுமய்யா.

சுரேஸ் பிறேமச்சந்திரனும் சிவாஜிலிங்கமும் பதவியேற்பை திட்டமிட்டு எதிர்த்ததுடன் அமைச்சுக் காய்சலில் நின்ற சித்தரையும் உள்வாங்கி 9 பேரை பதவியேற்க விடாது தடுத்தனர். ஊடகங்களில் பரபரப்பு அறிக்கை வேறு. முள்ளியவாய்காலில் சத்தியப்பிரமாணம் செய்யப்போவதாக கூட்டாக அறிக்கை விட்டார்கள். கடைசியா என்ன நடந்தது?

இவையின்ர அறிக்கையை தமிழரசுக் கட்சி கணக்கே எடுக்கல. கடைசியா மன்னார் ஆயரிட்ட போய் கெஞ்சினார்களாம். அவர் தீர்த்து வைக்கிறதாக கூறினார். நீங்கள் புறக்கணிக்கப் போவதாக அறிவித்த போது உங்கட ஆயர் எங்க போனவர்? அதைக் கேட்டு முள்ளியவாய்க்கால் சத்தியப்பிரமாணத்தை கைவிடுவதாக மண்டையன் குழு அறிவித்தது. ஆனால் சொன்னதை தனித்து செய்து முடித்தார் சிவாஜிங்கம். அவர் போய் முள்ளியவாய்க்கால் மண்ணில் பதவிப்பிரமாணம் செய்தார். ஆனால் இவர் இன்று தமிழ் மக்களை முள்ளிவாய்காலைக் காட்டி ஏமாற்றலாம் என முயல்கின்றார். மக்கள் என்ன மடையர்களா.. ஏன் ஐயா இந்த செப்படி வித்தை பிரபாகரனின் கோவணத்தை நீங்கள் முள்ளிவாய்க்காலில் மண்டியிட்டு கும்பிட்டால்தான் உங்களுக்கு மக்கள் வாக்களிப்பினம் என்று நினைக்கிறயளே. ஏன் சிவாஜிலிங்கம் தனது தலைவர் சிறிசபாரட்ணம் சுட்டுக்கொலை செய்யடப்பட்ட போயிலை தோட்டத்திற்குள் சென்று சத்தியப்பிரமாணம் செய்து கொள்ளவில்லை.

நிச்சயமாக ஒன்றை மட்டும் புரிந்து கொள்ளுங்கள் இது தமிழ் தேசியக் கூட்டமைப்பு வென்ற கடைசித் தேர்தல் என்பதை. சம்பந்தன் இவ்விடயங்களில் புலி. விக்கினேஸ்வரனை இழுத்துக்கொண்டுவந்து இத்தேர்தலில் நிறுத்தியிருக்கா விட்டால் மக்களின் தீர்ப்பு என்னவாக இருந்திருக்கும் என்பது யாவருக்கும் தெரியும். மக்கள் ஒன்றை மட்டுமே சிந்தித்தனர். அது யாதெனில், விக்கினேஸ்வரன் ஓரு முன்னாள் நீதிபதி , முன்னாள் காடையர்கள் அத்தனைபேரையும் அடக்கி ஒரு நியாயமான வழியில் செல்வார் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக இருந்தது. ஆனால் நீங்கள் ஏல்லோரும் கட்டாக்காலிகள் என்பதை காட்டி விட்டீர்கள்.

மற்றவர்கள் ஆயரின் ஆதரவுடன் விக்கினேஸ்வரனுக்கு முன்னால் பதவிப்பிரமாணம் செய்ய தீர்மானித்த வேளையில், புளொட் சிவி முன்னிலையில் எப்படி பதவிப்பிரமாணம் செய்யுறது எனக் கருதி, தமது கட்சி செயலாளர் முன்னிலையில் தனித்து பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டனர். கொஞ்சமாவது புளொட்டுக்கு யோசிக்கச் தெரிஞ்சிருக்கு தங்கட வெட்டி அறிக்கையையும் கௌரவத்தையும் கவலைப்பட்டிருக்கிறாங்கள். ஓகே அதைவிடுவம்.

மண்டையன் குழு ரவிகரனுக்கு கட்சித் தலைமையோட மோதல் என்று கதைக்கிறார்கள். ஏனென்றால் கட்சியில் நீண்டகாலமாக இருந்த ரவிகரனை ஓரம் கட்டிவிட்டு புதுசா காசு கொடுத்து வந்த வைத்தியர் சிவமோகன் பக்கம் ஈபிஆர்எல்எப் தாவிட்டாம். சரிதானே, அபிசா வைத்தியசாலையிலயும் சீட்டிலயும் சனத்திட்ட கொள்ளையடித்த காசு சிவமோகனிட்ட தானே இருக்கு. அவரோட நின்றால்தானே மண்டயன் குழுவுக்கு காசு வரும்.

வெறுப்படைந்த ரவிகரன் விக்கினேஸ்வரனிட்ட நல்லபிள்ளை என்ற பெயர் எடுத்த பவுடர் செலவத்தின்ர காலில போய் விழுந்திட்டாராம். செல்வம் ஹிரோவாகி ரவிகரனையும் ரெலோ குணசீலனையும்( குணசீலனுக்கு அமைச்சு கொடுக்க விடாமல் செய்தது செல்வம். தனது வாக்கு வங்கி உடைந்துவிடும் என்பதற்காக) கூட்டிக்கொண்டு கொழும்பில விக்கினேஸ்வரன் காலில விழப்பண்ணிற்றார். காலில விழுந்து மன்னிப்பு கேட்டு அவர் முன்னிலையில் பதவிப்பிரமாணத்தை செய்து கொண்டனர். வெட்டியறிகைக்கு இது எல்லாம் ஒரு புழைப்பு.

ஈபிஆர்எல்எப் கட்சியில பதவிப்பிரமாணம் செய்யமால் இன்னும் முன்று பேர் இருக்கினமாம். அதில ஈபிஆர்எல்எப் கட்சியின்ர செல்லப்பிள்ளை காசுமிசின் சிவமோகன், மற்றவர்கள் அப்பாவிகள் இந்திரராஜா, தியாகராஜா இவைய ஆரின்ர காலில விழுந்து மன்னிப்பு கேட்டு நல்ல பெயர் எடுக்கம் என்று மண்டையன் குழு தீவிர ஆலோசனை நடத்துதாம்.

சொன்னதை செய்ய முடியாமல் தமிழரசுக் கட்சிக்கு பயந்து காலில விழுகிற மண்டையன் குழுவுக்கு வெட்டிப் பேச்சு வேற. பேசமால் வெட்டிப் பேச்ச நிப்பாட்டிட்டு பவுடர் செல்வம் மாதிரி கூட்டிக்குடுக்கிற வேலையைப் பார்த்து நல்ல பிள்ளை என்ற பேரை எடுங்க.

அமைச்சுக்காக சண்டை பிடிச்சு பதவிப்பிரமாணத்தை எதிர்த்து கடைசியில் வென்றது மகிந்தவின் சால்வைக்குள் இருக்கும் தமிழரசுக்கட்சியே. தோற்றுப் போனது மண்டையன் குழுவும் அவர்கள் பின்னால் நின்ற ரெலோவும் புளொட்டும் தான்.

இனி மண்டையன் குழுவுக்கு சோதனைக் காலம் ஆரம்பம். செல்வம் மாதிரி மாறினால் மன்னிப்பு கிடைக்கும் என்கிறார்கள். பார்பம் என்ன நடக்குது என்று?

இறுதியாக இன்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் தான் கடந்த காலத்தில் விட்ட தவறுகளுக்கு பிராயச்சித்தமாக தமிழ் மக்களின் பிரச்சினையை தொடர்ந்து இழுத்தடிக்காமல் நியாயமான தீர்வொன்றை பெற்றுக்கொள்வோம் தொடர்ந்தும் பிச்சைக்காரன் கைப்புண் அரசியலை விடுவோம் என்று நினைக்கின்றார் என்பது தெளிவாக தெரிகின்றது. அதன் பொருட்டு மஹிந்தரின் சால்வையை எட்டிப்பிடித்துள்ளதும் புரிகின்றது. இதை மக்களும் இன்று ஏற்கின்றார்கள் என்பதும் தெளிவாக புரிகின்றது. அதற்கு ஒரே ஒரு சாட்சியம் யாதெனில் தேர்தலில் விருப்பு வாக்குகளுக்காக அடிபட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் விக்னேஸ்வரன் மஹிந்தரன் ஆலோசனையின் பேரில் நிறுத்தப்பட்டுள்ளார் என்ற பிரச்சாரத்திற்கு மத்தியிலும் அவர் அதிகூடிய வாக்குகளை பெற்றுள்ளார்.

1 comments :

Anonymous ,  October 15, 2013 at 1:54 PM  

It seems the conduct of these 9 diaspora (out of TNA) shows CV is right on choosing ministers based on Education. There are talented people who have not received proper school/University education but those people should prove by their character and talent that they are eligible for Minister post. Those nine have failed the test.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com