Friday, October 11, 2013

தமிழக கல்லூரி அதிபர் கொலை வழக்கில் இலங்கை மாணவன் கைது! கொலைக்கு விளக்கம் கொடுக்கும் கொலைகாரர்கள்!

தமிழகத்தில் கல்லூரி அதிபர் ஒருவர் கொலை செய்யப் பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள மூன்று மாணவர்களுள் ஒருவர், இலங்கை தமிழர் என்றும் ஜீ.டனீஸ் என்ற 21 வயதான தகவல் தொழில்நுட்பவியல் மாணவரான அவர், தூத்துக்குடியில் உள்ள சிவகங்கா அகதி முகாமில் வசித்து வருபவர் என்றும் ஹிந்து பத்திரிகை இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

அத்துடன் குறித்த கொலையை செய்துவிட்டு ஏன் கொலை செய்தோம் என்று வாக்குமூலமும் அளித்துள்ளனர். அவர்கள் வாக்குமூலம் வருமாறு: எங்கள் கல்லூரி முதல்வர் சுரேஷ் சிறிய சிறிய பிரச்சினைகளுக்கெல்லாம் தண்டனை வழங்குவார். 5 நிமிடம் கல்லூரிக்கு தாமதமாக வந்தால் கூட ரூ.500 வரை அபராதம் விதிப்பார். நாங்கள் 3 பேரும் கஷ்டப்பட்ட குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதால் அதனை எங்களால் கட்டமுடியவில்லை.

டனிசையும், பிரபாகரனையும் சஸ்பெண்டு செய்தார். பெற்றோரை அழைத்து வந்தால்தான் கல்லூரியில் சேர்ப்பேன் என்று கூறியதால், இரண்டு பேரும் கல்லூரிக்கு பெற்றோரை அழைத்து வந்தனர். அப்போது பெற்றோர் முன்பு இரண்டு பேரையும் அவதூறாக பேசினார். இதனால் இருவரும் மன உளைச்சலுக்கு ஆளானார்கள்.

இந்நிலையில் கடந்த 7-ந் திகதி என்னை சஸ்பெண்டு செய்தார். இது பற்றி கேட்ட போது, மாணவிகளை கேலி செய்ததால் சஸ்பெண்டு செய்துள்ளேன் என்றார். இது எனக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. மேலும் எனது பெற்றோரையும் அழைத்து அவர்கள் முன்பு என்னை அவமானப்படுத்தினார். இது பற்றி நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனிடம் கூறினேன். அப்போது பெற்றோர் முன்பு அவமானபடுத்திய கல்லூரி முதல்வர் சுரேசை கொலை செய்ய திட்டமிட்டோம்.

அதன்படி நேற்று காலை கல்லூரிக்கு அரிவாளுடன் சென்றோம். கல்லூரி வளாகத் திற்குள் சென்ற போது அங்கு வந்த சுரேஷ் என்னை பார்த்து கடுமையாக திட்டினார். மேலும் என்னை படிக்க வைக்க விடாமல் செய்து விடுவேன் என்று மிரட்டினார். இதனால் ஆத்திரமடைந்த நான் எனது நண்பர்கள் டேனிஸ், பிரபாகரனுடன் சேர்ந்து சுரேசை சரமாரி வெட்டினேன். இதில் அவர் இறந்து விட்டார். கல்லூரி ஊழியர்கள் சேர்ந்து எங்கள் 3பேரையும் பிடித்து பொலீசில் ஒப்படைத்து விட்டனர் என கொலை செய்த மாணவர் ஒருவர் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com