Wednesday, October 16, 2013

மருந்துக்கு பதிலாக ஸ்பிறிட் கொடுத்து உயிரோடு விளையாடிய மருத்துவமனை பணியாளர்!

மருத்துவமனை பணியாளர் ஒருவர், தவறுதலாக குழந்தை யென்றுக்கு சத்திர சிகிச்சை ஸ்பிரிட்டைக் ((surgical spirit) ) கொடுத்ததனால் இக்குகுழந்தை ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது இரம்புக்கனை நாரான்பெத்த பகுதியைச் சேர்ந்த ஒரு தந்தை தனது மூன்றரை வயதுக் குழந்தையை காய்ச்சலுக்கு மருந்து எடுப்பதற்காக மருத்துவரிடம் கொண்டு சென்றுள்ளார். சாப்பாட்டுக்குப் பிறகு கொடுக்கும்படி மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. நேற்று பகலுணவுக்குப் பிறகு தந்தை அந்த மருந்தை குழந்தைக்கு கொடுத்துள்ளார்.

மருந்தைக் குடித்த குழந்தை வயிறு எரிகிறதென்று கத்தியிருக்கிறது. தந்தை மருந்துப் போத்தலுடன் குழந்தையை மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக் கின்றார். மருந்து போத்தலைப் பார்த்த மருத்துவர் அது சத்திர சிகிச்சைக்கான ஸ்பிரிட் என்று கண்டு குழந்தையை மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். தற்போது குழந்தை மிக ஆபத்தான நிலையில் இரம்புக்கனை பிரிவு மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளது.

1 comments :

Anonymous ,  October 16, 2013 at 6:56 PM  

This happens mostly in the government hospitals,the pharmacists while they preparing the medicine or the mixture,talk unnecessary matters with their colleagues,just ignore the written prescription of the doctors,only concentrating their minds in their personal matters and do this,as a result the poor the sickly patients
getting more victimised.Even some times the the other staff too specially while giving polio injections to the little children they never ask ask the parents about the previous one just take syringe and do that.Seminars and workshops to be conducted regularly by the hospitals and the ignorant culprits are to be given the maximum punishment.Hospital is the place where you deal with the human lives and not a play ground

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com