Monday, October 28, 2013

மாலபே பகுதியில் போலி 2000 ரூபா நாணயத்தாள்களை வெளியிட்டவர் பிரபல ஆசிரியர்! சந்தேக நபர் கைது

மாலபே பகுதியில் கைப்பற்றப்பட்ட ஏழு மில்லியன் ரூபா போலி நாணயத்தாள்களை அச்சிட்டமை தொடர்பில் மூவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள் ளனர். இந்தச் சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் மீகொடை பகுதியைச் சேர்ந்த பிரத்தியேக வகுப்பின் ஆசிரியர் என இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப் பொன்றில் பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

பிரதான சந்தேகநபர் இதற்கு முன்னர் 04 சந்தர்ப்பங்களில் நாணயத்தாள்களை போலியாக அச்சிட்டமை தொடர்பில் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப் பட்டமை கண்டறியப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பில் நேற்றிரவு இரண்டாயிரம் நோட்டுக்கள் கைப்பற்றப்பட்டதுடன் நாணயத்தாள்களை போலியாக அச்சிடுவதற்குப் பயன்படுத்திய உபகரணங்களும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத் தினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இவ்வாறு போலி 2000 ரூபா நாணயத்தாள்கள் பல அச்சிட்டு பாவனைக்கு விடப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படுவதாகவும் அந்த நாணயத்தாளில் P 67799159 என்ற குறியீட்டு இலக்கம் குறிப்பிடப்பட்டுள்ளதுடன், அந்த இலக்கத்துடன் நாணயத்தாள் இருப்பின் அதனை அண்மையிலுள்ள பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்குமாறு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com