Wednesday, October 16, 2013

கல்முனைக் கல்வி வலயத்தில் 13 அதிபர் ஆசிரியர்கள் பிரதீபா பிரபா விருதை பெற்றுக்கொண்டனர். யு.எம்.இஸ்ஹாக் (படங்கள் உள்ளே)

மஹிந்த சிந்தனை தேசிய புனர்வாழ்வு திட்டத்திற்கேற்ப எதிர்கால சவால்களை வெற்றி கொள்ளக்கூடிய மாணவர் பரம்பரையொன்றை உருவாக்கும் முகமாக மிகப்பயன்மிக்க கற்றல் செயற்பாடுகளை முன்னெடுக்கும் ஆசிரியர்கள், அதிபர்களால் ஆற்றப்படும் உன்னதமான அளவிலா சேவையைக் கௌரவித்து பிரதீபா பிரபா விருது வழங்கப் படுகிறது. கல்வியமைச்சினால் மூன்றாவது தடவையாக இவ்விருதிற்கு அதிபர், ஆசிரியர்கள் தெரிவு செய்யப் பட்டமை குறிப்பிடத்தக்கது.

கல்முனை கல்வி வலயத்தில் இருந்து இரன்டு அதிபர்கள் உட்பட 11ஆசிரியர்கள் தெரிவு செய்யப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். விருது பெற்ற இவர்களை கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளர் யு.எல்.எம்.ஹாஸீம் அலுவலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை நடை பெற்ற அதிபர்கள் கூட்டத்தில் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் .

கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை அதிபர் வீ.பிரபாகரன், மாவடிப்பள்ளி அல்-அஸ்ரப் மகா வித்தியாலய அதிபர் எம்ஐ.எம்.சைபுடீன் உட்பட ஆசிரியர்களான எம்.ரீ. அழகுராஜா .யு.தயாபரன் , ஜே.எம்.இப்ராஹிம். திருமதி லுத்பி ஹூசைன் . திருமதி கே.அருள்நேசன், எஸ். கலையரசன் ,திருமதி எஸ் பரமலிங்கம், ஏ.மௌபியா திருமதி எம்.ஐ.றபீக்காபீவி எம்.சுவேந்திர ராஜா ஆகிய 13 பேரும் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டனர்.

நிகழ்வில் உதவிக் கல்விப் பணிப்பாளர்கள்,பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், கோட்டக் கல்விப் பணிக்காளர், ஆசிரிய ஆலோசகர்கள், அதிகபர்கள் என பலரும் கலந்து கொண்டனர்




1 comments :

கனடாவில் வசிக்கும் பழைய மாணவன் ,  October 16, 2013 at 2:49 PM  

இந்தப்படத்தில் இருப்பது வாசன் சேர் என்று நினைக்கின்றேன். அது அவராகவே இருந்தால் இலங்கைநெட்டுக்கு நன்றி.

நான் கல்முனை கார்மேல் பாத்திமா கல்லுரியில் 22 வருடங்களுக்கு முன்னர் படித்தபோது இருந்த தர்மலிங்கம் போன்ற பல்வேறு கழிசறை வாத்திமாருக்கு மத்தியில் ஆசிரியப்பண்புகளுடன் இருந்த சிலரில் வாசன் சேரும் ஒருவர் என்பதை என்னால் நிச்சயமாக கூறமுடியும்

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com