இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹா யாழின் பல பகுதிக்கும் விஜயம்!
யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ள இந்திய தூதுவர் வை.கே. சிங்ஹா, மீள்குடியேறியுள்ள அரியாலை மற்றும் எழுதுமட்டுவால் பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்து கலந்துரையாடியதுடன் தென்மாராட்சி பிரதேசத்தில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் மேற்கொள்ளப் பட்டு வரும் இந்திய வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளையும் பார்வையிட்டார்.
அதுமட்டுமல்லாது யாழ். இந்தியத் துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் நல்லூர் சங்கிலியன் தோப்பில் நடைபெற்ற கலை நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
தனது கடமைகளை பொறுப்பேற்ற பின்னர் உயர் ஸ்தானிகர் வை.கே.சிங்ஹா கொழும்பிற்கு வெளியில் மேற்கொள்ளும் முதலாவது விஜயம் இதுவாகும்.
0 comments :
Post a Comment