Wednesday, September 25, 2013

பூமியதிர்ச்சியின் பின்னர் பாகிஸ்தானில் திடீர் தீவு!

பாகிஸ்தானின் பலொசிஸ்தான் மாகாணத்தில் நேற்று (24) ஏற்பட்ட பாரிய பூமியதிர்ச்சியின் பின்னர் க்வதார் கடற் கரையில் அதிசயமாக திடீரென தீவொன்று தோன்றியு ள்ளதாக அந்நாட்டு வானிலை ஆராய்ச்சித் திணைக்களம் தெரிவித்துள்ளது.

7.8 ரிச்சடர் அளவிலான பூமியதிர்ச்சி ஏற்பட்டதன் பின்னர் திடீரென இத்தீவு அதிசயமாக தோன்றியுள்ளது.

இது குறித்து பாகிஸ்தான் வானிலை ஆராய்ச்சித் திணைக்களத்தின் பொதுப்பணி ப்பாளர் ஆரிப் மஹ்மூத் கூறுகையில்,

'பூமிதிர்ச்சியின் பின்னர் க்வதார் துறைமுகத்திற்கு அருகிலுள்ள கடற்கரையிலிந்து சுமார் 600 மீற்றர் தூரத்தில் அரேபியக் கடலில் ஒரு சிறிய தீவொன்று தோன்றியுள்ளது' எனத் தெரிவித்துள்ளார்.

சுமார் 9 மீற்றர் உயரமும் 100 மீற்றர் உயரமானதுமான இத்தீவினை பார்ப்பதற்கு அப்பகுதியில் ஏராளமான மக்கள் ஒன்றுகூடுவதாக க்வதார் உயர் பொலிஸ் அதிகாரி உம்ரானி கூறியுள்ளார்.

நேற்று பாகிஸ்தானில் ஏற்பட்ட பூமிதிர்ச்சியானது 1200 கி.மீ தூரத்தினைக் கடந்து இந்தியாவின் டெல்லி வரையில் உணரப்பட்டது. இதில் இதுவரையில் 238 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com