Thursday, September 26, 2013

உச்ச நீதிமன்ற நீதியரசராகிய விக்னேஸ்வரன் இவ்வாறு கோரிக்கை விடுக்கலாமா? - உதய கம்மன்பில

வட மாகாண ஆளுனரை அகற்றுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு விடுக்கும் கோரிக்கை அரசியலமைப்பிற்கு முரணானதாகும். இக்கூற்றை கண்டிப்பதாக மேல் மாகாண அமைச்சர் உதய கம்மன்பில இன்று கொழும்பில் இடம் பெற்ற செய்தியாளர் மாநாட்டில் தெரிவித்தரர்.

அவர் மேலும் தெரிவிக்கையில் வட மாகாணத்திற்கு முன்னாள் உச்ச நீதிமன்ற நீதியரசர் ஒருவர் முதலமைச் சராக நியமிக்கப்படவுள்ளார். மறுபுறம் சட்ட துறை சார்ந்த சுமேந்திரன் போன்ற வர்கள் பாராளுமன்ற உறுப்பினராகவுள்ளார். அவர்களுக்கு இந்த சட்டம் தொடர்பாக பேதிய அறிவின்மை காரணமாக இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மாகாண சபைக்கு ஜனாதிபதியிடம் குறித்த ஆளுநரை நியமிக்குமாறு கோரிக்கை விடுக்க முடியும். அவ்வாறு கோரிக்கை விடுப்பதற்கு 3 காரணங்கள் உண்டு. 154 ஆ. 2 ஆம் சரத்தின் கீழ் இது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.

முதலாவது விடயம் யாப்பை வேண்டுமென்றே மீறுவது.

இரண்டாவது விடயம் இலஞ்ச ஊழலில் தொடர்புபட்டிருப்பது.

மூன்றாவது விடயம் தமது அதிகாரத்தை பிழையாக பயன்படுத்துவது.

எமது ஆளுநர் இராணுவ அதிகாரி அவரோடு செயல்பட முடியாதென்ற அடிப் படையில் செயல்படுவதாகவிருந்தால் இது அரசியலமைப்பை மதிக்காமல் செயல்படும் ஒரு செயல்பாடாகும். இது வடமாகாண சபை அல்ல தமிழீழம் என்ற அடிப்படையில் செயல்படுவதையே திரு விக்னேஸ்வரன் உணர்த்துகின்றார்.

1 comments :

Anonymous ,  September 26, 2013 at 7:46 PM  

உதய கம்மன்பில யார் என்று எமக்கு தெரியாது.பத்திரிக்கை மாநாட்டை பற்றிய செய்தியும் எமக்கு வந்து சேரவில்லை.

வேறு ஆளுனர் தமிழ்தேசிய கூட்டமைப்புக்கு தற்காலிகமாக தேவைப் படுகிறது அரசியல்வேலை வெய்வதற்கு தமிழ்மக்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு "நாம் போராட்டம் நடத்துகிறோம்" என்று இலங்கை ஒட்டுமொத்த தமிழ்மக்களுக்களுக்கும் காட்டுவதற்கு.

தமிழ்தேசியகூடமைப்புக்கு இருப்பில்யுள்ள அரசியலே இலங்கையரசை குறை காண்பதும் அந்த அரசை உருவாக்கிய சிங்களமக்களின் மேல் வெறுப்பை உமுழ்வதுமே!

அரசியல் தமக்கு தெரியாது என்று கன்னிப் பேச்சுடன் வந்திறங்கிய கொழும்பு பட்டைச்சாமி விக்கினேஸ்வரன் அடுத்த இனக்கலவரத்திற்கு காரணமாக இருக்க போகிறார்.

நிலப்பிரபுத்துவம் முதாலித்துவம் என்கிற காலகட்டத்தில் எதையும் பிரதிபலிக்காமல் சேவகம் செய்தல் நக்கிபிப்ழைத்தல் காட்டிக்கொடுத்தல் போன்றவற்றால் வளர்ந்து வந்ததே இன்றுயுள்ள தமிழ்தேசியக் கூட்டமைப்பு.

என்று ஒரு தமிழ்மகன் இலங்கைமக்களின் குறிப்பாக சிங்களமக்களின் வறுமை அவலங்களை சிந்தித்து அதற்கான காரணங்களை தேட முற்படுகிறானோ அன்று தான் இந்த இந்த ஏமாற்று பேர்வழிகளான தமிழரசுக்கட்சி தமிழ்தேசிய கூட்டமைப்பு போன்றவற்றிலிருந்து தமிழ்மக்ககளை விடுவிட்டு ஒன்று பட்ட இலங்கைக்குள் வாழ்வு நடத்த முடியும்.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com