Thursday, September 26, 2013

காணி அதிகாரம் மாகாண சபைக்கு உரியதென்ற சர்ச்சைகக்கு முற்றுப்புள்ளி வைத்தது உயர்நீதிமன்றம்!

காணி அதிகாரம், மாகாண சபைக்குரியது அல்லவெனவும், மத்திய அரசாங்கத்திற்கே காணி தொடர்பான அதிகாரம் இருப்பதாகவும், உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ், நீதியரசர்களான கே. ஸ்ரீபவன், ஈவா வனசுந்தர உள்ளிட்ட மூவர் அடங்கிய நீதிபதிகள் குழு இன்று ஏகமனதாக இந்த தீர்ப்பை வழங்கியது.

13 வது அரசியல் அமைப்பு சீர்திருத்தத்தின் கீழ், மத்திய அரசாங்கத்தின் வசமுள்ள காணியொன்றை பொறுப் பேற்பது தொடர்பாக ஏற்கனவே கண்டி மேல் நீதிமன்றில் வழக்கொன்று தாக்கல் செய்யப்பட்டது. இதன்போது கண்டி மேல் நீதிமன்றம் காணி தொடர்பில் மாகாண சபைகளுக்கு விசேட அதிகாரம் இல்லையென, தெரிவித்தது. இத்தீர்ப்பு, மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இரத்து செய்யப்பட்டது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் குறித்த தீர்ப்பு சட்டத்திற்கு முரணானதென அறிவித்த உச்சநீதிமன்றம், 13வது அரசியல் அமைப்பு திருத்தத்தின் கீழ், மாகாண சபைகளுக்கு காணி தொடர்பான விசேட அதிகாரம் எதுவும் கிடையாதென, தெரிவித்தது.

பிரதம நீதியரசர் தலைமையிலான மூன்று நீதிபதிகளும், இத்தீர்ப்பினை ஏகமனதாக வழங்கினர். இதற்கான காரணங்களை நீதியரசர்கள் மூவரும் தனித்தனியாக முன்வைத்தனர். காணி தொடர்பான விடயங்கள், மத்திய அரசாங்கத்திற்கு உரியதென, நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இவ்வதிகாரத்தை மாகாண சபைகள் தன்னிச்சையாக பயன்படுத்துவதற்கு, 13வது அரசியல் யாப்பு திருத்தத்தில் வாய்ப்பு இல்லையெனவும், நீதியரசர்கள் சுட்டிக்காட்டினர். பிரதிவாதிகள் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கோமின் தயாசிறி தலைமையில் பாலித கமகே, மினோலி ஜினதாச, ரகித அபேகுணவர்தன ஆகிய சட்டத்தரணிகள் ஆஜராகினர்.

13 வது அரசியல் யாப்பு திருத்த சட்டத்தின் மூலம் காணி அதிகாரம் தொடர்பில் சர்ச்சைக்குரிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. காணி தொடர்பில் மாகாண சபைகளுக்கு எதுவித அதிகாரமுமில்லையென, நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இது அரசாங்கத்தின் மாபெரும் வெற்றி. உச்சநீதிமன்ற நீதியரசர்கள் மூவரும், அண்மைய வரலாற்றில் ஏகமனதாக இத்தீர்ப்பை வழங்கியுள்ளனர். இது தொடர்பில் சர்வதேசமோ, உள்ளுர் சக்திகளோ எதுவித விமர்சனங்களையும் முன்வைக்க முடியாது. ஆகவே, காணி அதிகாரம் மாகாண சபைக்கு உரியதென்ற சர்ச்சைகள் எதிர்காலத்தில் இருக்க வாய்ப்பில்லை என்பதை, நான் தெரிவித்துக்கொள்கின்றேன் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

1 comments :

Anonymous ,  September 26, 2013 at 7:16 PM  

மேற்குலக நாடுகள், தங்களைப் போல் மற்றைய நாடுகளும் நேர்மை, நீதியான வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதையே விரும்புகிறது. எனவே இலங்கையில் நடக்கும் குடும்ப ஆட்சியின் செயல் பாடுகளை நன்கு கவனித்து வருகிறது.

ஜனநாயகம் என்ற போர்வையின் கீழ் மக்களை ஏமாற்றி ராஜபக்ச குடும்பம் காணும் கனவும், சுகமும் பல காலம் நீடிக்க மாட்டாது. அநீதியான செயல் பாடுகள், அநீதியான நடவடிக்கைகள், அநீதியான முறையில் சேர்க்கும் பணம், சொத்து, சுகம் எல்லாம் ஒரு நாள் அவர்களை ஆபத்தில் நிற்சயமாக மாட்டும் என்பதே உலக நியதி.

உலக சரித்திரத்தில், மேற்குலக நாடுகளை இலகுவில் ஏமாற்றி விடலாம் என்று நினைத்தவர்கள், மேற்குலக நாடுகளை எதிர்த்தவர்கள் எவரும் மிஞ்சிய சரித்திரம் இல்லை.

அடோல்ப் கிட்லர் தொடக்கம் கெர்னல் கடாபி வரையிலான சர்வாதிகளின் வாழ்க்கையின் கசப்பான, கீழ்த்தரமான முடிவுகளை எல்லோரும் அறிவர்.

ராஜபக்ச குடும்பம், உறவினர், நண்பர்களின் தலைவிதி அவர்களைப் பொறுத்தது.

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com