நவநீதம்பிள்ளையின் கருத்தை அரசாங்கம் முற்றாக நிராகரித்தது! பிள்ளையின் கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முறன்படுகின்றன!
இலங்கை சர்வாதிகார பாதையில் பயணிக்கும் சில அறி குறிகளைக் காட்டியதாக ஐ.நா.சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை வெளியிட்ட கருத்தை அரசாங்கம் முற்றாக நிராகரித்துள்ளது.
கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய ஊடகத்துறை அமைச்சரும் அமைச்சரவை பேச்சாளருமாக கெஹெலிய ரம்புக்வெல்ல, இது தொடர் பில் தொடர்ந்தும் கூறுகையில், ஐ.நா. சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளை தனது விஜயத்தை முடித்துக் கொண்ட பின் வெளிப்படுத்திய கூற்றில் எமக்கு சந்தேகம் உள்ளது.
ஓர் இடத்தில் இலங்கை அரசு அடக்கி ஆழும் அணுகுமுறையை கடைப்பிடிப்பதாக தெரிவித்துள்ளார். அதேவேளை உலகில் யுத்தம் முடிவடைந்த எந்த ஒரு நாட்டிலும் காணப்படாத அபிவிருத்தியும் முன்னேற்றமும் புனர்வாழ்வும் இலங் கையில் காணப்படுவதாகவும், அது தொடர்பாக தான் திருப்தி அடைவதாகவும் தெரிவித்துள்ளார். இவருடைய இக்கூற்றுக்கள் ஒன்றுக்கொன்று முறன்படுவதன் காரணமாக எமக்கு அதில் சந்தேகம் எழுந்துள்ளது என்று சுட்டிக்காட்டினார்.
யுத்த ரீதியாக வெற்றி கொள்ள முடியாத சில விடயங்களை கருத்து ரீதியாக வெற்றி கொள்ள முற்படும் ஒரு சர்வதேச அழுத்தம் இருப்பதை அவதானிக்க முடிந்தது. கற்றுக்கொண்ட பாடங்களும் நல்லிணக்க ஆணைக்குழுவினதும் அறிக்கையில் ஐம்பது சத வீதம் ஏற்கனவே பூர்தியாகிவிட்டது.
சுமார் 13,000ற்கும் மேற்பட்டோர் புனர்வாழ்வு அளிக்கப்பட்டுள்ளனர். ஆயுதம் ஏந்திய போராளிகள் 300க்கும் மேற்பட்டோர் பல்கலைகழகங்களுக்கு அனுப்பட்டுள்ளனர். மேலும் 300க்கு மேற்பட்டோர் பாதுகாப்புச் சேவையில் இணைக்கப்பட்டுள்ளனர்.
யுத்தம் நிறைவடைந்த பின் அப்பிரதேசங்களில் பாரிய அபிவிருத்திகள் ஏற்பட்டுத்தப்பட்டுள்ளன. இவை தொடர்பாக அவர் திருப்தி தெரிவித்துள்ளார். இலங்கையில் இருப்பது அடக்கு முறை கொண்ட ஆட்சி என்பதை நாம் முற்றாக மறுக்கின்றோம்.
ஏனெனில் அரசின் அனைத்து செயற்பாடுகளும் எமது அரசியல் அமைப்பை மீறாத வகையிலே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. நாங்கள் எக்காரணம் கொண்டும் தேர்தலை பிற்போடவில்லை. ஊரிய காலத்துக்க முன்பே தேர்தல்களை நடாத்தி வருகின்றோம்.
ஊடக சுதந்திரம் தாராளமாக நாட்டில் அமுல்படுத்தப்படுகின்றது. ஊடக அமைச்சராக இருக்கும் என்னை பற்றியே அதிக கேலிச்சித்திரங்கள் பத்திரிகைகளில் வெளியாகின்றன. அரசையும் அரசின் செயற்பாடுகள் பற்றியும் தாராளமான விமர்சனங்கள் எழுதப்படுகின்றன என தெரிவித்தார்.
0 comments :
Post a Comment