இலங்கை தொடர்பாக அறிய இதுதான் சிறந்த சந்தர்ப்பம்! பிரிட்டிஷ் பிரதமர் நிச்சயம் இலங்கை வருவார் - வில்லியம்
எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறவுள்ள பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்ள போவதாக பிரிட்டிஷ் பிரதமர் உறுதியளி த்துள்ளார். பிரிட்டிஷ் பிரதமர் டேவிட் கெமரூன் எதிர்வரும் நவம்பர் மாதம் இலங்கையில் நடைபெறும் பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட்டில் நிச்சயம் கலந்து கொள்வார் என அந்நாட்ட வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் எழுப்பிய கேள்வியொன்றுக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். பொதுநலவாய அரச தலைவர்கள் மாநாட போன்ற முக்கிய மாநாடு ஒன்றில் கலந்து கொள்வது அனைத்து அங்கத்துவ நாடுகளுக்கும் பயன்மிக்கது என சுட்டிக்காட்டிய பிரிட்டிஷ் வெளியுறவு அமைச்சர் அங்கு ஆராயப்படும் விடயங்கள் அன்றி மாநாடு எங்கு நடைபெறுகின்றது என்பது முக்கியமில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
பயங்கரவாதத்தை ஒழித்த இலங்கை அடைந்து வரும் அபிவிருத்தியின் முன்னே ற்றம் உட்பட கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகள் செயற்படும் விதம் தொடர்பாக நேரில் கண்டறிவதற்கு இது ஒரு சிறந்த சந்தர்ப்பம் என வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment