Wednesday, September 4, 2013

அமைச்சர் மேர்வின் நவிபிள்ளையை திருமணம் செய்ய அழைத்தமை தவறானது - டலஸ்

இலங்கைக்கு வருகை தந்த ஐக்கிய நாடுகள் தாபனத்தின் மனித உரிமைகள் ஆணையாளர் நவனீதம் பிள்ளையை சிரமத்திற்குட்படுத்தும் வகையில் அமைச்சர் ஒருவர் தெரிவித்த கருத்து குறித்து அரசாங்கம் தனது ஆழ்ந்த கவலையை தெரிவிக்கின்றது.

ஒழுக்க ரீதியான கலாசாரத்தை மதிக்கும் ஒரு நாடு என்ற வகையில் இக்கூற்றை அங்கீகரிக்க முடியாது என அமைச் சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்துள்ளார்.

குறித்த அமைச்சரின் அந்த கூற்று தவறானது. எனது தாய்க்கு ஒருவர் திருமண பேச்சை முன்வைத்தால் எனது நிலை எவ்வாறு இருக்கும். இது தவறானது. இது ஒழுக்க ரீதியற்ற ஒரு செயல்.

மொத்த அமைச்சரவை சார்பாக நான் இதற்கு கவலையை வெளியிடுகிறேன். எமது நாட்டில் நாம் ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கின்றோம் அவ்வாறான ஒரு நாடே எமது நாடு. ஒரு ஒழுக்க ரீதியான கலாச்சாரத்தை கொண்டவர்கள் நாம் அவ்விடத்தில் இருந்து கொண்டே நாம் இதனை நோக்குகின்றோம். எவரிடமாவது நற்பெயரை பெற வேண்டும் என்பது எமது நோக்கமல்ல தப்பபிப்பிராயத்தை ஏற்படுத்துவதும் எமது நோக்கமல்ல என தெரிவித்தார்.

இலங்கைக்கு விஜயம் செய்துள்ள நவநீதம்பிள்ளைக்கு நாட்டை சுற்றிக்காட்டு வதற்கு தான் தயாரென்றும் இலங்கையின் வரலாற்றை கற்பித்துக்கொடுத்து அவரை திருமணம் முடித்துக்கொள்வதற்கு தயாரென்றும் பொதுமக்கள் தொடர் பாடல் மற்றும் பொதுமக்கள் உறவுகள் அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com