Tuesday, September 17, 2013

வேட்பாளர்களுக்கு கூட குல பேதங்களை காட்டும் த.தே.கூ, எல்.ரி.ரி.ஈ தலைமையையே தெடர்ந்தும் வலியுறுத்தி வந்தள்ளது!

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனம் தெளி வாகவே நாட்டை கூறுபோடும் முயற்சியாகு மெனவும், நாட்டை கூறுபோடும் முயற்சி நீண்ட காலமாக இருந்து வரும் சூழ்ச்சியாகும். அதுவொரு புதிய முயற்சியல்ல எல்.ரி.ரி.ஈ தலைமைத்துவத்தை ஏற்றுக் கொள்ளுமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பு அன்ற முதல் தமிழ் மக்களை தொடர்ந்தும் வற்புறுத்தி வந்துள்ளது என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ த ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரி கைக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்தர்ர்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனமும் எல்.ரி.ரி.ஈயினருக்கு சார்பானதாகும். நாட்டை பிரிப்பதாக கூறி அப்பாவி தமிழ் மக்களின் உணர்வுகளை சீண்டி வாக்குகளை கொள்ளையிடும் நோக்கில் இந்த விஞ்ஞாபனம் வெளியிடப் பட்டுள்ளதாகவும், இது முற்றிலும் கவலைக்குரிய விடயம் தெரிவித்த ஜனாதிபதி இது போன்ற முயற்சிகளுக்கு இந்தியா ஆதரவு வழங்காதென்பதே எனது நம்பிக்கையாகுமெனவும் ஜனாதிபதி சுட்டிக்காட்டினார்.

குல பேதங்களை காட்டி வேட்பாளர்களுக்கு கூட தமிழ் தேசிய கூட்டமைப்பு வேற்றுமை காட்டுகின்றது. இந்த வேற்றுமைகளை சகிக்க முடியாத பலர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் இணைந்து கொள்வதாகவும் ஜனாதிபதி இந்நேர் காணலில் தெரிவித்தார்.

ஹிந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகைக்கு ஜனாதிபதி கருத்து தெரிவிக்கையில், கற்ற பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் மேற்கொள்ளப்படுவதில்லையென குற்றம் சுமத்தும் சர்வதேச சமூகம் வடக்கு கிழக்கு அபிவிருத்தி பணிகளை அரசாங்கம் மேற்கொள்ளும் விதத்தை நேரில் சென்று பார்வையிடுமாறும் அவர் தெரிவித்தார்.

புலம்பெயர் தமிழர்களின் கருத்தக்களை ஏற்றுக் கொண்டு பக்க சார்பாக செயல்பட வேண்டாமென ஜனாதிபதி சர்வதேச சமூகத்தினரிடம் வேண்டுகோள் விடுத்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com