Wednesday, August 21, 2013

‘உனக்கு காது வெடிக்க அடிக்க வேண்டும் போல் தோன்றுகிறது’ – ஹரின் பேயாட்டமாம்...!!

‘உனக்கு காது வெடிக்க அடிக்க வேண்டும் போல் தோன்றுகின்றது’ என ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பிரனாந்து வென்னப்புவ, அலிமுல்ல பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் பேயாக நடனமாடியுள்ளதாகத் தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களான ஹர்ஷ த சில்வா மற்றும் ஹரின் பிரனாந்து இருவரும் அமைப்பாளர்களால் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளனர். இக்கூட்டத்தில் ஹரின் பிரனாந்து ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பற்றி வர்ணனை செய்து கொண்டிருக்கையில், அக்கூட்டத்திற்கு வருகை தந்திருந்த ஒருவர் தனது எதிர்ப்பைக் காட்டியதனால், ஹரின் பிரனாந்து கோபமிகுதியால் ஆவேசப்பட்டு, தனது வாகனம் மீது ஏறிநின்று இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஹரின் பிரனாந்துவின் இந்தப் பேச்சைக் கேட்டதும் கூடியிருந்தோரில் பெரும்பாலானோர் தங்களது எதிர்ப்பைத் தெரிவித்ததைத் தொடர்ந்து அவர் அவசரமாக அங்கிருந்து தனது வாகனத்தில் ஏறிச் சென்றுள்ளார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com