Tuesday, August 6, 2013

மோர், தயிர் யார் யார் எல்லாம் அருந்தலாம்?

தமிழர்களின் உணவில் இரண்டறக் கலந்தது பாலில் இருந்து கிடைக்கும் மோர் மற்றும் தயிர் இவற்றில் உடலுக்குச் சூடு என்பார்கள் தயிரை ஆனால் அதே தயிரை மோராக்கினால் உடலுக்குக் குளிர்ச்சி என்பார்கள் எப்படி! இப்படிப் புரியாத புதிராக உள்ள தயிர் மோரை தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதில் உண்டாகும் சில சந்தேகங்கள்.

தினமும் தயிர் சாப்பிடுவது நல்லதா? யாரெல்லாம் சேர்த்துக்கொள்ளக் கூடாது? என்பது தொடர்பாக நாம் உங்களுக்கு தருகிறோம் புரதம், கால்சியம், பொட்டாசியம், பாஸ்பரஸ், வைட்டமின் B12, ரிபோஃப்ளோவின் எனப்படும் வைட்டமின் B2, கொழுப்புச் சத்து எனப் பல சத்துகள் தயிரில் உண்டு எனபதுடன் 100 மி.லி தயிரில் 60 கலோரி கிடைக்கிறது என்பதுடன் ஒல்லியாக இருப்பவர்கள் மற்றும் நுரையீரலில் பிரச்னை உள்ளவர்கள் நிச்சயம் தயிர் சாப்பிட வேண்டும்.

மசாலா அதிகம் சேர்க்கப்பட்ட உணவுகள் செரிமானமாக நேரம் எடுத்துக்கொள்ளும் உணவுகள், பிரியாணி போன்ற உணவைச் சாப்பிடும்போது தயிர் அல்லது மோர் சாப்பிட்டால் நல்லது ஏனெனில், இவை உணவு செமிக்கத் தேவையான பாக்ட்டீரியாக்களை உருவாக்குகின்றன என்பதால்த்தான் தமிழர்கள் தங்கள் உணவில் கடைசியாக தயிர் அல்லது மோர் சேர்த்துக் கொள்கின்றனர்.

எடை அதிகரிக்க விரும்புபவர்கள், தயிரில் சர்க்கரை கலந்து லஸ்ஸி போல் சாப்பிடலாம். ஆனால், இரவில் தயிர் சேர்த்துக்கொண்டால், உடனடியாகத் தூங்க செல்லாமல் 10 நிமிடம் நடைப் பயிற்சி செய்தபின்னர்தான் படுக்கைக்குச் செல்லவேண்டும் என்பதுடன் உடல் பருமன் உள்ளவர்கள், சர்க்கரை நோயாளிகள் அதிக அளவு தயிர் சேர்த்துக்கொள்ளக் கூடாது.

100 மி.லி. மோரில் வெறும் 15 கலோரிதான் கிடைக்கிறது என்பதுடன் இதில் நிறைய சத்துகள் இருப்பதால், எல்லோரும் மோர் அருந்தவேண்டியது அவசியம் என்பதுடன் எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவரும் மோர் குடிக்கலாம் அதே வேளை தினமும் மோர் குடிப்பது உடலுக்கு நல்லது. அதிக எடையால் பாதிக்கப்பட்டவர்கள் மோர் அதிகளவு குடித்தால் நல்லது எனினும் மோருடன் இஞ்சி, வெந்தயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி போன்றவற்றைச் சேர்த்து அருந்துவது இன்னும் நல்லது.

மோர் உடல் வெப்பத்தைக் குறைக்கும் என்பதுடன் சளி பிடித்திருப்பவர்கள் மோரை மிதமான சூடு செய்து குடிக்கலாம். அல்சர் வராமல் தடுக்க, பித்தப்பை மற்றும் சிறுநீரகக் கற்கள் உருவாவதைத் தவிர்க்க தினமும் மோர் அருந்துவது அவசியம்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com