பாடசாலை மேலதிக வகுப்பிற்கு சென்ற 16 வயது மாணவியைக் காணவில்லை: பெற்றோர் பொலிஸில் முறைப்பாடு
யாழ்ப்பாணம் ஏழாலை மேற்கு கோட்டைக்காட்டை சேர்ந்த நகுலேஸ்வரன் நளிர்வனா ( 16 வயது) என்ற மாணவியே கடந்த நான்கு நாட்களாக காணாமல் போயுள்ளதாக, பெற்றோரால் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிசார் தெரிவித்தனர்.
க.பொத சாதாரண தரத்தில் கல்வி கற்று வருவதடன் இந்த மாணவி கடந்த செவ்வாய்க்கிழமை பாடசாலையில் மேலதிக வகுப்பிற்காக சென்றவர் இதுவரையில் வீடுதிரும்பவில்லை என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டள்ளதுன் குறித்த மாணவியை அவரது தந்தையே சம்பவ தினத்தன்று வகுப்பில் விட்டுவிட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக சுன்னாகம் பொலிசார் குறிப்பிட்டனர்.
0 comments :
Post a Comment