தயா மாஸ்ரரை வெளியேற்றியது டான் ரீவி.
புலிகளின் முன்னாள் ஊடக இணைப்பாளராக இருந்தவர் தயா மாஸ்ரர் எனப்படுகின்ற தயாநிதி. இவர் வன்னியில் புலிகள் மண் கவ்வியதை தொடர்ந்து இராணுவக் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் வந்ததடன் யாழ்பாணத்தில் இயங்கி வருகின்ற டான் தொலைக்காட்சியில் இணைந்து கொண்டார். தற்போது இலங்கையில் நடைபெறவுள்ள மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி சார்பில் யாழ் மாவட்டத்தில் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளார்.
இவ்வறிவிப்பை தொடர்ந்து டான் ரீவி தயா மாஸ்ரரை நீக்குவதாக அதிரடியாக அறிவித்துள்ளது. டான் ரீவியின் இயக்குனர் திரு. குகநாதன் அவர்களால் இவ்வறிவித்தல் கடந்த செவ்வாய் கிழமை யாழ் ஊடக மையத்தில் வெளிவிடப்பட்டது. „ஒரு சுதந்திர ஊடகம் அரசியல் கட்சி ஒன்றின் வேட்பாளரை தொடர்ந்தும் ஊழியாராக வைத்துக்கொண்டு நடுநிலைமையாக செயற்பட முடியாது என்ற காரணத்தினால்' தயா மாஸ்ரர் நீக்கப்பட்டுவதாக குகநாதன் தெரியப்படுத்தியுள்ளார்.
இவ்வறிவித்தலை விடுத்து அங்கு ஊடகவியலாளர்களுக்கு குகநாதன் தொடர்ந்து தெரிவிக்கையில் : „ டான் ரீவியில் தயாநிதி அவர்கள் இணைந்து 6 மாதங்கள் சேவையாற்றிய பின்னர், கொழும்பிலுள்ள ஊடகம் ஒன்று விடயத்தினை செய்தியாக தெரியப்படுத்தியதை தொடர்ந்தே யாழிலிருந்து செயற்படுகின்ற ஊடகங்கள் விடயத்தை செய்தியாக வெளியிட்டிருந்து. ஆனால் நான் இன்று தயாநிதி எமது நிறுவனத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளார் என்ற செய்தியையும் அதற்கான காரணத்தையும் உங்களிடம் தெரிவித்திருக்கின்றேன் அவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துங்கள்' என வேண்டுதல் விடுத்தார்
0 comments :
Post a Comment