வர்த்தகரை கடத்தி கொலை செய்தாக குற்றம் சாட்டப்பட்ட D.I.G யின் இடத்திற்கு எல்.ஜி. குலரத்ன நியமனம்! மேலும் பல D.I.G. .....!
திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் எல்.ஜி. குலரத்ன, உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வடமேல் மாகாண பிராந்தியத்திற்கு பொறுப்பான புதிய பிரதிப் பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
வடமேல் மாகாணத்திற்கு பொறுப்பாக இருந்த முன்னாள் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வாஸ் குணவர்தன, பம்பலப்பிட்டி வர்த்தகரை கடத்தி கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு அந்தப் பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்திற்கே இவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை,அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராக செயற்பட்ட கபில ஜயசேகர திருகோணமலை மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும், மட்டக்களப்பு மாவட்டத்திற்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் வி. இந்திரன் மட்டக்களப்பு பிராந்தியத்திற்கு மேலதிகமாக அம்பாறை பிராந்தியத்திற்கான பதில் பிரதிப் பொலிஸ்மா அதிபராகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.
குறித்த கொலைச்சம்பவத்துடன் தொடர்புடைய பல பொலிஸார் கைதுசெய்யப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment