படுகாயமடைந்த கல்லடி விவேகானந்தா வித்தியால மாணவன் வைத்தியசாலையில் அனுமதி! தாய் ஸ்தலத்திலேயே பலி!
மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியின் நாவற்குடா பிரதேசத்தில் நேற்று இடம்பெற்றவாகன விபத்தில் தாய் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த தாய் ஒருவர் பாடசாலை முடிந்து தனது மகனை வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் கூட்டிச்சென்று கொண்டிருந்த போது நாவற்குடா பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக வைத்து கல்முனையை நோக்கி சென்று கொண்டிருந்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் மோதிய இந்த கோர விபத்து நடந்துள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த நாவற்குடா பிரதேசத்தைச் சேர்ந்த 44 வயதுடைய ஈஸ்வர ராஜ் நாகேஸ்வரி எனும் தாய் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், இவரது மகனான 10 வயதுடைய தனுஜன் படுகாயமடைந்து ஆரையம்பதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த மாணவன் கல்லடி விவேகானந்தா வித்தியாலயத்தில் தரம் 5ல் கல்விகற்று வருவதுடன், இம்மாணவன் சகல குறைகளிலும் சிறந்து விளங்கும் ஒரு திறமையான மாணவன் என பாடசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
2 comments :
இவ்வாறான வாகன சாரதிகளுக்கு 'விபத்து - தற்செயல்' என்ற கொள்கைக்கிணங்க பொதுமன்னி;ப்பு கொடுக்காமல் எந்த தயக்கமும் இல்லாமல் மரணதண்டனை வழங்கவேண்டும். இவ்வாறு தண்டனை வழங்காமல் விடுவதால் தான் வாகன சாரதிகள் தொடர்ந்தும் தவறு புரிகின்றனர்
இவ்வாறான வாகன சாரதிகளுக்கு 'விபத்து - தற்செயல்' என்ற கொள்கைக்கிணங்க பொதுமன்னி;ப்பு கொடுக்காமல் எந்த தயக்கமும் இல்லாமல் மரணதண்டனை வழங்கவேண்டும். இவ்வாறு தண்டனை வழங்காமல் விடுவதால் தான் வாகன சாரதிகள் தொடர்ந்தும் தவறு புரிகின்றனர்
Post a Comment