தனது சிறுநீரை தானே அருந்தும் அமைச்சர் மேர்வின் சில்வா!
பொதுமக்கள் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் மேர்வின் சில்வா, அண்மைய நாட்களில் தனது சிறுநீரை தானே அருந்தி வருவதாகக் கூறப்படுகிறது. பல சித்தர்களின் கருத்திற்கிணங்கவும், இந்திய ஆயுர்வேத வைத்தியர்களின் ஆலோசனைக்கிணங்கவும், அவர் தனது சிறுநீரை அருந்தி வருவதாக தெரிவித்துள்ளார். இவர் நாளாந்தம் பல தடவைகள் சிறுநீர் அருந்துவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பில் நேற்று ஊடகவியலாளர் ஒருவருக்கு கருத்துத் தெரிவித்த அமைச்சர் மேர்வின் சில்வா, இந்தியாவின் முன்னாள் பிரதமர் மொராஜி தேசாயும் சிறுநீர் அருந்தியதனை நினைவூட்டியதுடன், அதனடிப்படையில் நோய் தீர்க்கும் நிவாரணியாக தானும் தனது சிறுநீரை அருந்தி வருவதாகவும், அதன் மூலம் சாதகமான தன்மைகளும் ஆரோக்கியமும் காணப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தான் முழுமையான சிறுநீரை மட்டும் அருந்தவில்லை எனவும், அதில் குறிப்பிட்டளவு நீரும் கலந்தே அருந்தி வருவதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
1 comments :
இவர் No 1 என்ன No.2 வை உட்கொண்டாலும் இவர் செய்யும் காரியங்களோடு ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றும் பெரிதல்ல.
Post a Comment