Monday, June 3, 2013

பயங்கரவாத செயற்பாடுகள் ஏன் நினைவுகூரப்படுகின்றன? குரோதம் பகைமையை பரப்பு.....ஜனாதிபதி

இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காகவே கடந்தகால பயங்கரவாத செயற்பாடுகளை நினைவுகூர்வதாகவும், மாறாக குரோதம் பகைமையை பரப்புவதற்கு அல்ல எனவும், நாட்டில் மீண்டுமொரு பயங்கரவாதம் ஏற்படாத வகையில் இன ஐக்கியத்தை கட்டியெழுப்புவதற்காகவே குறித்த விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றன எனவும், பௌத்தர்களும் தேரர்களும் ஒருபோதும், இந்நாட்டின் அடிப்படை வாதிகள் அல்ல என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

வெலிமடை பொரலந்த ஹீங்நாராமகொல்ல ஸ்ரீசுதர்சனராம விகாரையில் வாகல்கட தாது மந்திர என்பவற்றை திறந்துவைத்ததோடு, விகாரையின் உத்தியோகபூர்வ பக்கமும் ஜனாதிபதியினால் ஆரம்பித்து வைக்கப்பட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், 1818 ம் ஆண்டில் இடம்பெற்ற ஊவா வெல்லஸ்ஸ புரட்சியை தொடர்ந்து , 18 வயதுக்கும் மேற்பட்ட சகல ஆண்களும், பிரித்தானிய ஏகாதிபத்திய வாதிகளால் கொலை செய்யப்பட்டனர். அவர்களது நாசகார வேலைகளிலிருந்து பிழைத்த எஞ்சிய பரம்பரையிலிருந்து வந்தவரே விpஜயகோன் கெதர சுமன திஸ்ஸ தேரர் ஆவார். அவர் குறித்த பிரதேசத்தின் வளர்ச்சிக்கு அளப்பரிய சேவையாற்றியுள்ளார்.

நாட்டுக்காக சேவையாற்றியவர்களை நினைவுகூர்ந்து சிலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிpட்ட ஜனாதிபதி, எமது இளம் பராயத்தினர் விகாரைகளுடன் இணைற்து செயற்பட வேண்டிய காலம் இதுவெனவும் நாட்டின் எதிர்காலம் இன்றைய இளம் பராயத்தினரின் கையில் தங்கியுள்ளதாகவும், இளம் பராயத்தினரை சிறந்த முறையில் வளர்த்தெடுக்க வேண்டுமென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com