திரைப்பட இயக்குனர்- நடிகர் மணிவண்ணன் மாரடைப்பால் மரணம்
தமிழ் திரைப்பட இயக்குனர்களில் சிறந்து விளங்கியவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் மணிவண்ணன். இவர் இன்று (15) சென்னை நெசப்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டில் பகல் 12 மணி அளவில் திடீர் மாரப்டைப்பால் மரணம் அடைந்துள்ளார். இவருக்கு வயது 59.
இவர் , 1979-ம் ஆண்டு பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தார். பின்னர் படிப்படியாக உயர்ந்து இயக்குனர் ஆனார். இவரது முதல் படம் ‘கோபுரங்கள் சாய்வதில்லை’. ‘நூறாவது நாள்’, ‘ஜல்லிக்கட்டு’ உட்பட 50 படங்களை இயக்கியுள்ளார். இவர் இயக்கிய ‘அமைதிப்படை’ வெற்றி பெற்று தமிழ்திரையுலகின் முக்கிய இயக்குனர் என்ற அந்தஸ்தை இவருக்கு பெற்றுக்கொடுத்தது.
படையப்பா, முதல்வன், காதலுக்கு மரியாதை, ரெட் உள்பட 400-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தும் உள்ளார். சமீபத்தில் வெளியான ராஜராஜ சோழன் எம்.ஏ. என்ற படம் இவரது 50-வது படம். இதுவே கடைசிப் படமாகவும் அமைந்துவிட்டது.
நெசப்பாக்கத்தில் உள்ள அவரது உடலுக்கு திரையுலகத்தினர் அஞ்சலி செலுத்தி வருவதாக இந்திய ஊடகங்கள் அறிவிக்கின்றன.
0 comments :
Post a Comment