13 இற்காக அமைச்சர் பதவியைக் கைவிடுவது ‘சின்ன விடயம்’ என்கிறார் ராஜித்த
13 ஆவது திருத்தச் சட்டத்தைப் பாதுகாப்பதற்காக அமைச்சர் பதவியைக் கைவிடுவது என்பது சிறிய விடயம் என மீன்பிடி மற்றும் நீரியல் வள அபிவிருத்தி அமைச்சர் ராஜித்த சேனாரத்ன குறிப்பிடுகிறார்.
கொழும்பு அரச ஊடகத் திணைக்களத்தில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் உரையாற்றும்போது அமைச்சர், 13 ஆவது திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்படக் கூடாது என்றார்.
தனது உடம்பில் 4 வெடி குண்டுகளின் பகுதிகள் காணப்படுவதாகவும், அவற்றில் 3 ஜே.வி.பி. யினரின் வெடிகுண்டுகள் எனவும், அடுத்தது எல்.ரீ.ரீ. யினரில் வைக்கப்பட்ட வெடிகுண்டு எனவும் நினைவுறுத்திய அமைச்சர், அவ்வாறான நிலைக்குத் தான் முகம்கொடுத்த்தன் காரணம் அரசியலுக்காக தன்னை அர்ப்பணித்ததனாலேயே என்றும் குறிப்பிட்டார்.
13 ஆவது திருத்தம் பற்றி மக்கள் விருப்பைப் பெறத் தேவையில்லை எனக் குறிப்பிட்ட அமைச்சர், அது ஏற்கனவே பொருத்தமானதால்தான் வெற்றிபெற்றதென்றும் சுட்டிக் காட்டினார்.
13 ஆவது அரசியல் திருத்தச் சட்டம் தொடர்பாக எடுக்க வேண்டிய முடிவு தொடர்பில் நேற்று முன்தினம் (13) நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டம் சூடு பிடித்திருந்ததுடன், அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, ராஜித்த சேனாரத்ன, டியூ குணசேக்கர, ரவூப் ஹக்கீம் ஆகியோர் அங்கு 13 திருத்தச் சட்டம் மாற்றியமைக்கப்படக்கூடாது தீர்க்கமாக்க் கூறியிருப்பதுடன், அமைச்சர் விமல் வீரவன்ச அந்த சட்டத்தை மாற்றியமைக்காது வடக்கில் தேர்தல் நடாத்த முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment