விவசாயியாக இருந்திருக்க வேண்டியவர் இன்று அமைச்சராக உள்ளார்! ஏனென்றால் இலங்கையில்.... அனுரகுமார.
கல்வி அமைச்சர் பந்துல குணவர்தன மற்றும் உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க ஆகியோர், இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இருப்பதால்தான் இன்று அமைச்சர்களாக இருக்கின்றார்கள் என்றும், இலங்கையில் இலவசக் கல்வி நடைமுறையில் இல்லாமல் இருந்திருந்தால், உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க விவசாயியாகவே இருந்திருப்பார் என மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது.
மக்கள் விடுதலை முன்னணியின் ஏற்பாட்டில் கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போது ம.வி.மு விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுரகுமார திஸநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், இன்று இலவசமாக பெற்றுகொள்ளும் கல்விசார் பட்டங்களை இவர்கள் 150,000 ரூபாய்க்கு விற்பவர்களாக உள்ளனர் என்றும், இதனூடாக இன்று இலவச கல்வி என்பது அழிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது எனவும் தெரிவித்தார்.
மேலும் நடைமுறையில் இலவசக் கல்வியை இல்லாமல் செய்யும் முயற்சிக்கு எதிராக கருத்து தெரிவித்த 214 மாணவர்கள் இன்று பல்கலைக்கழகங்களிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார்.
0 comments :
Post a Comment