Thursday, May 23, 2013

எவரெஸ்டில் ஏறிய முதியவர்!

ஜப்பானைச் சேர்ந்தவர் யுசிரோ மியுரா. இவருக்கு வயது 80. இவர் உலகிலேயே உயரமான சிகரமான எவரெஸ்டில் ஏறி சாதனை படைத்துள்ளார். கடல் மட்டத்திலிருந்து 29 ஆயிரத்து 28 அடி உயரம் கொண்ட எவரெஸ்ட் சிகரத்தின் உச்சியை இவர் இன்றுகாலை 8.30 மணியளவில் அடைந்துள்ளார்.

நான்குமுறை இதய அறுவை சிகிச்சை செய்துகொண்ட இந்த முதியவர், 60 ஆண்டுகளுக்கு முன் எட்மன்ட் ஹிலாரி ஏறிய அதே பாதையில் சென்று இந்த சாதனையை செய்துள்ளார். இவருடன் மகன், 3 ஜப்பானியர்கள், 6 நேபாள மலையேற்ற வீரர்களும் சென்றனர்.

மியுரா முதல் முறையாக கடந்த 2003-ம் ஆண்டு எவரெஸ்ட் சிகரத்தில் ஏறினார். அதை தொடர்நது 2008-ம் ஆண்டு தனது 76 வது வயதில் இரண்டாம் முறையாக எறினார். நோபாளைச் சேர்ந்த மின் பகாதூர் 2008-ம் ஆண்டு தனது 76 வது வயதில் எவரெஸ்டில் ஏறி கின்னஸ் சாதனை படைத்தார். இந்த சாதனையை 80 வயது மியுரா தற்போது முறியடித்துள்ளார்.

ஆனால் இந்த வார இறுதியில், எவரெஸ்ட் சிகரத்தில் 81 வயதாகும் மின் பகாதூர் மீண்டும் ஏறவுள்ளார். இதனால், மியுராவின் சாதனை மிக விரைவில் முறியடிக்கப்படலாம் எனறு கூறப்படுகிறது.

எவரெஸ்ட் சிகரத்தில் இதுவரை 4 ஆயிரம் பேர் ஏறியுள்ளனர். அதில் 240 பேர் தங்கள் முயற்சியின் போது உயிரிழந்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com