7வயதுச் சிறுமி மீதான் பாலியல் துஷ்பிரயோகம் : இராணுவ வீரர் இருவர் கைது!
வவுனியா நெடுங்கேணி பகுதியில் 7 வயதுடைய சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பெயரில் இராணுவ வீரர் ஒருவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 14.05.2013 அன்று வவுனியா நெடுங்கேணி சேனைப்புலவு என்ற கிராமத்தில் ஏழுவயதான பள்ளிச் சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டார். இச்சம்பவமானது அப்பிரதேசத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.
இதனையடுத்து சம்பவம் தொடர்பில் முறையான விசாரணைகளை முன்னெடுக்க பொலிஸார் தாமதித்தமையால், கடந்த திங்கட்கிழமை பிரதேச மக்களால் குறித்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவரை உடன் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் எனக்கோரி ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த குற்றத்தடுப்பு புலனாய்வு துறையினர் சந்தேகத்தின் பெயரில் நேற்று மாலை நெடுங்கேணி இராணுவ முகாமைச்சேர்ந்த இராணுவ வீரர் ஒருவரை கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இராணுவ வீரர் இன்று காலை வவுனியா நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என கூறப்பட்ட போது இதுவரையில் ஆஜர்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment