புலித்தலை எனக்குத்தான் சொந்தம்! சீமானை கண்காணிப்பீர்! சிவசேனா மாநிலத்தலைவர் பொலிஸில் புகார்.
இந்தியாவில் மராட்டி மாநிலத்தில் பிரதானமாக உள்ளது சிவசேனாக் கட்சி. அக்கட்சியின் சின்னமாக புலித்தலை உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் தமிழர் கட்சி புலித் தலையை தனது சின்னமாக பயன்படுத்துகின்றது.
இந்நிலையில் தனது கட்சியின் சின்னமான புலித்தலையை சீமான் பயன்படுத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என சிவசேனா மாநில தலைவர் குமாரராஜா, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளார்.
அவர் தனது புகாரில் : சிவசேனா இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சி. சிவசேனா கட்சியின் சின்னம் புலித் தலை. இதை நாம் தமிழர் கட்சி நடத்தி வரும் சீமான் பயன்படுத்தி வருகிறார். இது சட்ட விரோத செயல் ஆகும் என்றும் இந்திய அரசால் தடை செய்யப்பட்ட, விடுதலை புலிகள் இயக்கத்தை, சீமான் பகிரங்கமாக ஆதரிக்கிறார். இந்தியாவில் இருந்து தமிழகத்தை பிரிக்க, சதி செயலில் ஈடுபட்டு வருகிறார். இந்த சதி செயலுக்கு, வெளிநாடுகளில் நிதி திரட்டப்படுவதாகவும், தகவல்கள் வருகின்றன. ஆகவே, காவல்துறையினர், சீமானின் செயல்பாடுகளை கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவசேனாவுக்கு சொந்தமான புலித் தலையை, சட்ட விரோத செயலுக்கு பயன்படுத்துவதை தடை செய்ய வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
அவரின் இம்முறைப்பாடு இந்திய சட்ட வரைபுகளுக்கு உட்பட்டதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனவே சீமான் புலித்தலையை வைத்து நடாத்தும் வியாபாரத்திற்கு இத்துடன் முடிவு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
2 comments :
Even an attractive name might bring a good sale of a standardless product.This is the trick of the trade."See man" cannot be an exemption of this trick.
கேடுகெட்ட தமிழக கோமாளி அரசியல் வாதிகளும், அவன்களின் எடுபிடிகளும்
தமிழ் மக்களை ஏமாற்றி தங்கள வயிற்ரை நிரப்ப எடுக்கும் ஏமாற்று அரசியல் தந்திரங்களுக்கு, மத்திய, மாநில அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.
உண்மையான, நேர்மையான தமிழன்
Post a Comment