வ/தமிழ் மத்திய மகா வித்தியாலயம் (தேசிய பாடசாலை) மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய ஆசிரியை
வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலயம் பிரசித்தி பெற்ற பாடசாலையாக இருப்பினும் அங்கு சம காலத்தில் பல பிரச்சினைகள் இடம் பெறுவதாக பெற்றோர் குற்றம் சாட்டுன்றனர். கடந்த வாரம் முதலாம் ஆண்டு மாணவன் ஒருவனை 1 நு வகுப்பாசிரியை திருமதி.டார்வினா கடுமையான முறையில் தண்டித்துள்ளார். பாடசாலைக்கு சேர்ந்து மூன்று மாதங்களே ஆன நிலையில் குறிப்பிட்ட மாணவன் இன்னொரு மாணவனை தள்ளி விட்டதாக தெரிவித்து பிரம்பால் காட்டுமிராண்டித்தனமாக அடித்துள்ளார். அவர் அடித்துக்கொண்டிருக்கும் போது பாடசாலை விட, மாணவனின் தந்தை வகுப்புக்கு சென்றுள்ளார். அவருக்கு முன்னாலேயே டார்வினா ஆசிரியை இவ்வாறு மாணவனைத் தாக்கியுள்ளார்.
ஆசிரியையால் பாதிக்கப்பட்ட மாணவனின் வயிறு, முகம், கை, கால் என்று எல்லா இடங்களிலும் பலத்த தழும்புகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் வீட்டுக்குச் சென்று எண்ணை 'சித்தான் தழும்புகளை மாற்றினோம் என்று பெற்றோர் தெரிவித்துள்ளனர்.
அதிபரிடம் முறைப்பாடு தெரிவித்த பொழுது அவர் அதை பொருட்படுத்தவில்லை என்று பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
இதே போன்று கடந்த செவ்வாய்கிழமை அதே ஆசிரியை வேறு ஒரு மாணவனை தாறுமாறாக அடித்துள்ளார். மாணவனுக்கு முகத்தில் கறுப்பாக இரு தழும்புகள் பதியும்படி அடித்துள்ளார். வலது பக்க கண் விங்கியுள்ளது. அந்த பெற்றோரும் குறிப்பிட்ட ஆசிரியை கண்டித்து ஆரம்பப் பிரிவு அதிபரிடம் முறையிட்டுள்ளனர். இம் முறையும் அதிபர் தான்தோன்றித்தனமாகவே இருந்துள்ளார்.
பாடசாலைக்கு சேர்ந்து மூன்று மாதங்களில் அந்தச் சூழலுக்கு பழக்கப்படாத ஆறு வயது பிள்ளைகளை கண்டிப்பதற்கும், தண்டிப்பதற்கும் வழிமுறைகள் இருக்கின்றன. இவ்வாறிருக்க இவ் ஆசிரியை இவ்வாறு நடந்திருப்பது வரவேற்கத்தக்க விடயமல்ல. பொறுப்பில்லாத ஆசிரியர்களும், அதிபர்களும் கல்விச் சேவைக்கு உகந்தவர்கள் அல்ல. எனவே இத்தகையோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்துகின்றோம்.
இன்னும் தமிழ் மகாவித்தியாலயம் தொடர்பான பல்வேறு அம்சங்களுடன் சந்திக்கின்றேன்.
--- சித்தன் ---
3 comments :
கல்விச் சேவைக்கு குரிய போதிய ஆசிரிய அறிவு, பயிற்சி, அனுபவம், பொறுப்புணர்வு இல்லாத ஆசிரியர்களும், அதிபர்களும் கல்விச் சேவைக்கு உகந்தவர்கள் அல்ல.
குறுக்கு வழியில் வந்தவர்களை பணி நீக்கம் செய்வதே சிறந்து.
Hope this female teacher is suffering
with severe HYSTERIA and the head with eccentric,they should be admitted for medical treatment.If they are not medically treated
be sure they are not fit to serve in a school.
உலகம் எங்கோ நோக்கி முன்னேறும் காலத்தில் எங்கள் நாட்டில் இன்னும் இப்படிக் காட்டுமிராண்டிகள் ஆசிரியைகளாக இருப்பது வேதனைக்குரியது ,
இவர்களை ஆசிரியத் தொழிலிலிருந்து விடுவித்து கண்ணி வெடி அகற்ற அனுப்ப வேண்டும்.
Post a Comment