பொரலஸ்கமுவவில் பெண்ணொருத்தி கொலை
பொரலஸ்கமுவ, கல்வல வீதி, கட்டுவாவல பிரதேசத்தில் கூயை ஆயுத்தத்தினால் தாக்குதலுக்குள்ளாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.
50 - 55 வயது மதிக்கத்தக்க பெண்ணொருத்தியே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் ஊடகப்பிரிவு குறிப்பிட்டது.
இன்று காலை கிடைத்த தகவலொன்றையடுத்தேஇப்பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வெட்டுக் காயங்களுடன் கொலை செய்யப்பட்ட பெண்ணின் 19 வயது மதிக்கத்தக்க மகனும் கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதாகவும் பொலிஸ் தெரிவித்தனர்.
கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் எவரும் இதுவரை கைதுசெய்யப்படவில்லை.
(கேஎப்)
0 comments :
Post a Comment