மேற்கத்தேயம் ஆயிரம் சொல்லட்டும் - எதனையும் நாங்கள் கருத்திற் கொள்ள மாட்டோம் -கோத்தபாய
‘உலகிலிருந்த கொடூர பயங்கரவாத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவந்து, நாட்டை சமாதான நாடாக மாற்றியமைத்துள்ளோம். இவ்வேளை மேற்கத்தேய நாடுகள் எத்தனை பிரேரணைகளை எடுத்து வந்தாலும், எங்கள் குறிக்கோளிலிலிருந்து நாங்கள் மாற மாட்டோம்’ என பாதுகாப்புச் செயலர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிடுகிறார்.
சின்னஞ் சிறுவர்களைக் கூட இளம் படைவீரர்களாக்கி அவர்களைக் களத்திற்கு அனுப்பி, வடக்கிலுள்ள சாதாரண மக்களின் வாழ்க்கையை மாத்திரமன்றி அபிவிருத்தியையும் இல்லாமற் செய்த விடுதலைப் புலிகளின் மிலேச்சத்தனமான காரியங்களைப் பற்றிக் கருத்திற் கொள்ளாமல் அரசாங்கத்திற்கெதிராக விரலை நீட்டுவது எவ்வாறு ஆகும் எனவும் பாதுகாப்புச் செயலர் தெளிவுறுத்துகிறார்.
யுத்தம் முடிவடைந்து நான்கு ஆண்டுகள் ஆகின்றன. இவ்வேளை வடக்கிலுள்ள மக்களுக்கு சமாதானத்தைப் பெற்றுக் கொடுத்ததுபோலவே, அவர்களுக்கான நலனோம்புத் திட்டங்களும் மேலெடுக்கப்படும் எனவும் குறிப்பிட்ட கோத்தபாய, இந்நாட்டின் குறிக்கோள் பற்றி சிந்திக்க வேண்டியது மேற்கத்தேய நாடுகள் அல்ல, இலங்கை வாழ் மக்களே எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
1 comments :
Experience counts a lot and it is always helpful for your future.As an experienced person he may act accordinlgy.Hope his experience would protect the soveringnity of the country.
Post a Comment