இந்திய யோகா குரு மீது மாஜி மாணவி செக்ஸ் புகார்
வாஷிங்டன்:அமெரிக்கா வாழ் இந்தியரான, பிரபல யோகா குரு, விக்ரம் சவுத்ரி மீது, முன்னாள் மாணவி செக்ஸ் புகார் கூறியுள்ளார்.அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள, "பிவேர்லி ஹில்ஸ்' பகுதியில், யோகா மையம் நடத்தி வருபவர், விக்ரம் சவுத்ரி, 67.இவரிடம் அமெரிக்க முன்னாள் அதிபர்களான, ரொனால்டு ரீகன், பில் கிளின்டன் மற்றும் பாப் பாடகி மடோனா, நடிகர் ஜார்ஜ் க்ளூனி உள்ளிட்டோர், யோகா கற்றுள்ளனர்.
விக்ரம் சவுத்ரி, தன்னை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றதாக, அவரது முன்னாள் மாணவி, சாரா பான், 29, லாஸ் ஏஞ்சல்ஸ் ஐகோர்ட்டில், வழக்கு தொடர்ந்துள்ளார்.இது குறித்து, சாரா பான் கூறியதாவது:விக்ரம் நடத்தும், யோகா மையத்தில் சேர்ந்த சில நாட்களிலேயே, அவர் மற்ற மாணவிகளிடம் நடந்து கொண்ட விதம், வழக்கத்துக்கு மாறாக இருந்ததை கவனித்தேன். மனைவியால் மனரீதியாக பாதிக்கப்பட்டிப்பதாகவும், இதிலிருந்து நிவாரணம் பெற, தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறும், என்னை பலமுறை வற்புறுத்தினார்.
முற்பிறவியில், என்னுடன் நெருங்கிய உறவில் இருந்ததாகவும் குறிப்பிட்டார்.ஒரு முறை, என்னை கீழே தள்ளி, பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றார்.இதற்கு உடன்படாததால், எனக்கு பயிற்சி அளிப்பதை நிறுத்தி விட்டார். இதனால், என் எதிர்காலம் பாதிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, சாரா கூறினார்................................
1 comments :
Why there are packed of sex stories,behind some of these Hindu Grujis ?.
Where the Spirituality,holiness,Godlinees? and how they have quite a number of followers ? a bit of confusing situation.
Post a Comment