இலங்கையர்கள் தமிழகத்திற்கு செல்லத்தடை. கோட்டாபய
உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், தமிழகத்திற்கு செல்வதற்கு, இலங்கையர்களுக்கு முற்றாக தடைவிதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, சுயாதீன தொலைக்காட்சி சேவைக்கு தெரிவித்துள்ளார். தற்போதைய நிலைமையில், இலங்கையர்களின் பாதுகாப்பிற்காக, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த நாட்களில், இலங்கை தேரர்கள், தமிழகத்தில் எல்ரிரிஈ யிற்கு துணைபோகும் சக்திகளால் தாக்கப்பட்டுள்ளனர் எனவும் இந்நிலைமையை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வரை, இலங்கையர்களுக்கு தமிழகத்திற்கு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
விசேடமாக தமிழகமூடாக, யாத்திரை மேற்கொள்வதற்கும், தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் புனித ஸ்தலங்களுக்கு யாத்திரிகர்களை அழைத்துச்செல்லும்போது, தமிழகத்தினூடாக செல்வதை உடனடியாக இடைநிறுத்த வேண்டுமென்றும், அறிவிக்கப்பட்டுள்ளது. வேறு மாநிலங்களுடாக செல்லுமாறும், வேண்டப்பட்டுள்ளனர். இந்த உத்தரவினை மீறி, யாத்திரிகர்களை அழைத்துசெல்லும் பட்சத்தில், இலங்கையர்களின் பாதுகாப்பு கருதி, சட்டநடவடிக்கை எடுக்கப்படுமென்றும் கோட்டாபய எச்சரிக்கை விடுத்துள்ளார்:
4 comments :
Well done Mr. Gottabaya Rajapakse,we need not go to south Indian holy places where rowdism and thuggery have a dominant places,than holiness.Pilgrims, why not you visit our holy places in our country like Kataragama,Muneeswaram,Lord Buddha`s tooth relic in Kandy,Anuradhapura,Sripada,kelaniya Rajamaha vihare.etc etc.Don`t make yourself and your country cheap by going to south India as pilgrims.God is everywhere and not only in particular places.
முதுகெலும்புள்ள ஒரு மனிதனால் எடுக்கப்படக்கூடிய எடுக்கப்பட வேண்டிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலிருந்து இலங்கை வந்த பிச்சை எடுக்கும் அல்ல இலங்கை மக்களின் உழைப்பை சுரண்டும் இந்தியா காரன்கள் அனைவரையும் வெளியேற்றுவேண்டும்.
அடுத்த இந்திய பொருட்களுக்கு தடைவிதிக்கவேண்டும்.
ஒரு சில சுயநல கோமாளிகளின் கூத்துக்கும், சில வானரங்களின் சேட்டைக்கும் பயப்பட வேண்டிய அவசியமில்லை. தமிழ் நாட்டில் நல்ல மனிதர்கள், பண்பானவர்கள், அன்பானவர்கள், படித்தவர்கள் நிறையவே உள்ளார்கள். அவர்களின் நட்பு இலங்கை மக்களுக்கு தேவை.
மற்ற மாநிலத்தவர்களுடன் இலங்கை அரசு நல்ல உறவை வளர்த்து தமிழ் நாட்டு காட்டு மிரண்டிகளை தனிமை படுத்த வேண்டும் , அத்துடன் தமிழர்கள் வாழும் நாடுகளான சிங்கப்பூர் , மலேசியா , மொரிசியஸ் , மியன்மார் போன்ற நாடுகளுடன் உறவை பேணி இந்த தமிழ் நாட்டு காட்டு மிரண்டிகளை தனிமை படுத்த வேண்டும்.
Post a Comment