டக்ளசின் வழியில் மன்னாரில் மண்தோண்ட தயாராகி விட்டார் ரிசாட் பதுயுதீன்.
யாழ்பாணத்தில் மண்தோண்டி சர்ச்சைக்குள்ளாகியிருக்கின்றார் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவர் டக்ளஸ் தேவானந்தா. இந்நிலையில் மன்னாரில் மண்தோண்ட தயாராகிவிட்டார் அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரிசார்ட் பதுயுத்தீன்.
வன்னி மாவட்டத்தில் இந்திய நிதி உதவியில் அமைக்கப்படவுள்ள வீட்டுத்திட்டத்திற்கான மண் விநியோகத்தினை இலங்குவைத்தே ரிசார்ட் பதுயுத்தின் மண்தோண்டலுக்கு தயாராகி விட்டதாக அறியக்கிடைக்கின்றது.
இதற்கான அனுமதிப்பத்திரத்தில் தலைமன்னார் பிரதேச செயலக செயலாளர் கையெழுத்திட்டுள்ளதாகவும். ரிசாட்டின் அழுத்தம் காரணமாக இடம் குறிப்பிடப்படாத பத்திரிகை ஒன்றில் அவர் கையொப்பம் இட்டதாகவும் ரிசாட்டின் மண்தோண்டல் கும்பல் மண்ணை தோண்டுகின்றபோது அதற்கேற்ப அந்த பத்திரம் பாவிக்கப்படவுள்ளதாகவும் அறியக்கிடைக்கின்றது.
சுமார் 200 ஏக்கர் நிலத்தில் இவ்வாறு மண் தோண்டப்படவுள்ளது. இவ்வாறு மண் தோண்டப்படுகின்றபோது அப்பிரதேசம் எதிர்கொள்ளக்கூடிய எந்த அச்சுறுத்தல்கள் தொடர்பாகவும் அங்கறை கொள்ளாத தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் , ரிசார்ட் காக்கா உழைப்பதில் எங்களையும் கொஞ்சம் கவனித்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லிவிட்டு ஜெனிவாவில் பிட்சா சாப்பிட்டு கொண்டு திரிவது இங்கு குறிப்பிடத்தக்கது.
1 comments :
ஒருவர் மீது பழி சொல்வதற்கு முன்னம்- அவர் யாராக இருந்தாலும்- தீர விசாரித்து விட்டுப் பழி சொல்வதுதான் நியாயம். எங்கோ காற்று வாக்கில் வந்த செய்தியை நம்பி-பலராலும் விரும்பிப் படிக்கப்படும் ஒரு பொறுப்புமிக்க ஊடகத்தில் அதனைப் பதிவிடுவது சரியல்ல.
முஸ்லிம் மக்களுக்கு அமைச்சர் ரிசாட் ஆற்றிய சேவைகளை விட தமிழ் மக்களுக்கு ஆற்றிய சேவைகள்தான் அதிகம். இறுதி யுத்தத்தின் போது தமிழ் மக்கள் வெளியேறி வவுனியாவுக்கு வந்த நேரம் அம் மக்களுக்கு அவர் செய்த சேவைகளை மனச்சாட்சியுடன் எண்ணிப் பார்க்க வேண்டும். இரவு பகல் பாராது, தூங்காது, தன் உடல் ஆரோக்கியம் பற்றிக் கூட அக்கறைப்படாது அரசாங்கத்தின் மூலமாகவும் சர்வதேசத்தின் மூலமாகவும் உதவிகளைப் பெற்று தமிழ் மக்களின் அப்போதைய துன்பத்தையும் சோகத்தையும் தணித்து, அவர்களுக்கு ஓரளவாவது நிம்மதியைக் கொடுத்தவர் அமைச்சர் ரிசாட்.
நானும் ஒரு முஸ்லிம் என்பதற்காக அமைச்சருக்கு வக்காலத்து வாங்கவில்லை. உண்மைகள் வரலாற்றில் பதிவு செய்யப்பட வேண்டும் என்பதற்காகவே கூறுகிறேன்.
தமிழ் மக்களுக்கு துரோகம் செய்ய வேண்டும் என்று அவர் என்றும் எண்ணியதே இல்லை என்பதற்கு பல சான்றுகளைக் காட்ட முடியும். மாறாக தமிழ் மக்களின் மீது அன்பும் பாசமும் வைத்திருப்பதோடு, அவர்களின் துன்பங்கள் மறைந்து, அவர்கள் வாழ்வில் நிரந்தர ஒளி பிறக்க வேண்டும் என்பதே அவரது ஆசையும் விருப்பமுமாகும் என்பதற்கும் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்.
அரசியலுக்கப்பால் மனித நேயம் கொண்டவர் ரிசாட். ஆனால் அரசியலில் அவர் தனக்கு இடையூறாக வந்து விடுவாரோ என்று கோழைத்தனமாகச் சிந்திப்பவர்களினால்தான் அவர் மீது அடிக்கடி வீண் பழிகள் சுமத்தப்படுகின்றன.
ரிசாட் உடன் பழகிப் பாருங்கள்...அல்லது பழகிய தமிழ் மக்களிடம் கேட்டுப் பாருங்கள். அப்பொழுது தெரிந்து கொள்வீர்கள் இதை:-
''ரிசாட் உண்மையிலேயே ஒரு மனித நேயன்''
Post a Comment