மலேசியாவில் கள்ள மட்டை மோசடியில் ஒரேநேரத்தில் 25 இலங்கையர்கள் சிக்கினர்.
எனது மகன் இல்லை என்கிறார் கனடா உதயன் பத்திரிகையின் லோகேந்திரலிங்கம்.
மலேசியாவில் கள்ள மட்டை மோசடியில் ஈடுபட்டுவந்த கும்பல் ஒன்றை மலேசிய பொலிஸார் விசேட நடவடிக்கை ஒன்றின் ஊடாக மடக்கினர். பொலிஸாரின் இந்நடவடிக்கையில் சுமார் 25 பேர் கைதாகினர். இவர்களில் ஓரிரு மலேசியர்கள் தவிர அனைவருமே இலங்கையர்கள். இலங்கையர்களில் பிரித்தானியா, பிராண்ஸ் , கனடிய நாட்டு கடவுச்சீட்டுக்களை கொண்டுள்ளவர்கள் அடங்குகின்றனர்.
இவர்கள் பயங்கரவாத வலைப்பின்னல் ஒன்றின் செயற்பாட்டிலேயே இயங்கியுள்ளனர் என்பது ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக மலேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன. புலிகள் செயற்பாட்டில் இருந்தபோது கள்ள மட்டை மோசடியை தமது வருவாய்க்காக பயன்படுத்தி வந்ததும், அதனூடாக பெறும் பணம் ஆயுதக்கொள்வனவுக்கு செலவாகின்றது எனச் சொல்லப்பட்டதும் யாவரும் அறிந்த விடயம்.
இந்நிலையில் புலிகளின் மேற்படி சட்டவிரோத வியாபாரங்களை நியாயப்படுத்தி வரும் கனடா உதயன் பத்திரிகையின் பிரதம ஆசிரியர் லோகேந்திரலிங்கத்தின் மகனும் மலேசியாவில் கைது செய்யப்பட்டுள்ளவர்களில் ஒருவர் எனச் செய்திகள் வெளியாகியிருந்தது.
இது தொடர்பில் லோகேந்திரலிங்கத்தை தொடர்பு கொண்டு கேட்டபோது, தனது மகன் மலேசியா செல்லவில்லை என்றும் அவர் அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்றும் கூறினார்.
0 comments :
Post a Comment