Thursday, March 7, 2013

ஐ.நா பாதுகாப்பு படையினர் 21 பேர் சிரிய புரட்சிப்படையினரால் சிறைப்பிடிப்பு! விடுவிக்க கோருகிறார் பான் கீ மூன்.

சிரியாவில் ராணுவத்துக்கும், புரட்சிப்படைக்கும்இடையிலான சண்டையில் ஏராளமான பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். அதிபர் அசாத்துக்கு எதிராக போராடி வரும் புரட்சிப் படையினரின் கை நாளுக்கு நாள் ஓங்கி வருகிறது. இந்நிலையில், கோலன் ஹைட்ஸ் பகுதியில் அமைதிப் பணியில் ஈடுபட்டிருந்த 21 ஐ.நா. அமைதிப்படையினரை புரட்சிப்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.

போர் நிறுத்த நடவடிக்கைகளை கண்காணித்து வந்த தங்கள் பார்வையாளர்களை, ஆயுதம் தாங்கி போராடும் புரட்சியாளர்கள் பிடித்து வைத்துள்ளதாக ஐ.நா.வும் உறுதி செய்துள்ளது.

கோலன் பகுதியில் உள்ள கிராமத்தில் குண்டு வீசுவதை நிறுத்துவதுடன், அங்குள்ள அதிபர் ஆசாத்தின் படைகள் வாபஸ் பெற்றால்தான் 21 பேரையும் விடுவிப்போம் என்று புரட்சிப் படையினர் நிபந்தனை விதித்துள்ளனர். அவர்களுடன பேச்சுவார்த்தை நடத்துவதற்காக ஒரு குழுவை ஐ.நா. அனுப்பியுள்ளது. அந்தக் குழுவினர் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

பிணையக் கைதிகளாகப் பிடித்து வைத்துள்ளவர்களை கிளர்ச்சியாளர்கள் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ-மூன் வலியுறுத்தி உள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com