பால்மாவில் இரசாயனப்பதார்த்தம் உள்ளதா? சந்தேகத்தை நீக்க முயல்கிறது பாவனையாளர் அதிகார சபை
இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படுகின்ற பால்மாவில் உடலுக்கு கேடு விளைவிக்கக் கூடிய DICYANDIAMIDE என்ற இரசாயனப் பதார்த்தம் கலந்துள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக நுகர்வோர் பாவனையாளர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
பல்வேறு தரப்பினரிடமிருந்துகிடைத்த தகவல்களையடுத்தே இவ்வாறு பால்மா தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அதிகார சபையின் தலைவர் ரூமி மர்ஸூக் தெரிவித்துள்ளார்.
குறித்த இரசாயன பதார்த்தம் இறக்குமதியாகும் பால்மாவில் இருக்கிறதா என்பதை கண்டறியும் வசதி இலங்கையில் இல்லாததால் வெளிநாடொன்றில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment