இனங்களுக்கிடையில் பிளவை ஏற்படுத்தாது ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காண்பீர். அஸ்கிரிய பீடம்.
இனங்கள் மத்தியில் பிரச்சினைகள் ஏற்படாத வகையில் ஹலால் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென, அஸ்கிரிய பீட சங்க சபை உறுப்பினர்களான தேரர்கள் தெரிவித்துள்ளனர். அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பிரதிநிதிகள், அஸ்கிரிய பீடத்தில் சங்க சபை உறுப்பினர்களை சந்தித்தபோது, இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹலால் சான்றிதழ் தொடர்பில் இஸ்லாமியர்கள் அல்லாத மக்கள் மத்தியில் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளதனால், அவ்வாறான கருத்து பேதங்கள் ஏற்படாத வகையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியம் தொடர்பாக, இச்சந்திப்பின்போது, சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
ஹலால் தேவைப்படுவோருக்கு மட்டும் அச்சான்றிதழின் கீழ் உணவு உற்பத்தியை மேற்கொள்வதில் பிரச்சினைகள் எதுவும் இல்லையெனவும், அச்சான்றிதழை விரும்பாத மக்களை, அவ்வுணவுப்பொருட்களை விநியோகிப்பது, பிரச்சினைகள் ஏற்படுவதற்கு காரணமெனவும், அஸ்கிரிய பீட சங்க சபையின் தேரர்கள் சுடடிக்காட்டியுள்ளனர்.
இச்சந்திப்பில் அஸ்கிரி விஹாரையின் தலைமை பதிவாளர் சங்கைக்குரிய ஆனமடுவே தம்மதஸ்ஸி தேரர் உள்ளிட்ட உறுப்பினர்களும், அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் தலைவர் அஷ்ஷெய்க் எம்.ஐ.எம். றிஸ்வி முப்தி, ஹலால் பிரிவு செயலாளர் மௌலவி முர்சித் முலப்பர் உள்ளிட்ட பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment