Saturday, March 2, 2013

தமிழ் மக்களுக்கு ஜெனிவா படம் காட்டும் த.தே.கூ மஹிந்தரை காப்பாற்றும் என்பது திண்ணம்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் அண்மைக்கால நடவடிக்கைகள் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளைப் பிரதிபலிப்பதாக இல்லை என்பது தற்பொழுது புத்திஜீவிகள் மற்றும் தமிழ் மக்கள் மத்தியில் மனஆதங்கங்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் ஜெனீவாப்பயண நாடகம், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புப் பதிவு, கட்சிக்குள் இடம் பெறுகின்ற ஊழல்கள், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் வசமுள்ள பிரதேச சபைகளுக்குள் நடைபெறுகின்ற உட்கட்சிமுறன்பாடுகள் போன்ற பலவிடயங்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் ஜெனீவாவில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு வலுச்சேற்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சர்வதேச நாடுளில் முகாமிட்டுள்ளதால் தமிழ் மக்களுக்கு எந்தவெரு பலனும் கிடைக்கப்போவதில்லை என்பதையும் மக்கள் நன்குணர்ந்துள்ளனர்.

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத்தொடரில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரால் கலந்துகொள்ளக்கூடிய சந்தர்பங்கள் இருந்தும் அதனை சூட்டுமமாக தவிர்த்துவிட்டு அதில் கலந்துகொள்வது போன்ற மாயையினை கூட்டமைப்பினர் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளனர். இது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் கபடத்தனமான அரசியலை வெளிக்காட்டி நிற்கின்றது.

தமிழ் மக்களின் ஏகப்பிரதிநிதிகள் எனத்தம்மைக் கூறிக்கொள்கின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் சிங்கள ஆட்சியாளர்;களிடம் பணத்திற்காக மண்டியிட்டு மஹிந்தவின் நிகழ்ச்சி நிரலுடன் செயற்பட்டு வருகின்றனர். சர்வதேச ரீதியாக சிங்கள ஆட்சியாளர்களுக்கு அழுத்தங்கள் அதிகரிக்கும் பொழுது மஹிந்த குடும்பத்தினைப் பாதுகாப்பதைத் தமதுகடமையாக ஏற்றுச்செயற்படுகின்றனர்.

வீதிகளில் கோசமிட மட்டும் வடகிழக்கு பகுதிகளுக்கு வருகின்ற இவர்கள் தமது அரசியல் தேவைகள் முடிந்தகையுடன் தென்பகுதியில் தங்கியிருந்து சுகபோகங்களை அனுபவித்துக்கொணடு சர்வதேச நாடுகளுக்குப் பறந்துவிடுகின்றனர்;. ஆனால் போராட்டத்தின் வேதனைகளைத் தமிழ் மக்களே சுமக்கவேண்டும். இதுதான் தாயகத் தமிழனின் தலைவிதி.

வடமாகாண சபைக்கான தேர்தலை நடத்துவதற்கான சமிக்ஞையை சிங்களம் காட்டியுள்ளது. தற்போதய அளும்கட்சியின் முக்கிய பங்காளிக்கட்சியான ஸ்ரீலங்கா சகந்திரக் கட்சியை வடபகுதியில் பலப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் முடுக்கிவடப்பட்டுள்ளன. இந்த எதிர்வுகூறலின் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் வடக்கில் தேர்தலுக்கான மணியை அடித்துள்ளனர் என்றே கூறவேண்டும்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைப் பொறுத்தவரையில் கடந்த காலத் தேர்தல்களில் யுத்த அழிவுகளையும் அனர்த்தங்களையும் அடக்குமுறைகளையும் காட்டித் தமிழ் மக்களிடம் அனுதாபவாக்குகளை பெற்று வெற்றியீட்டினர் என்பது யாவரும் அறிந்தவிடயமே.

இதே முறைகளைப் பின்பற்றித் தேர்தலை வெல்வதற்காகவே மக்கள்போராட்டங்கள் எனக்கூறிக்கொண்டு தமது கட்சி ஆதரவாளர்களின் உதவியுடன் போராட்டங்களை நடத்துகின்றனர். இதனால் மக்களே பாதிப்படைகின்றனர். அதேபோல் தமிழ் அரசியல் தலைவர்கள் ஜெனீவா விவகாரத்திலும் பாசாங்கு காட்டி வேடிக்கையான அரசியல் செய்துவருகின்றனர். ஒருஇனம் அழியாமல் இருப்பதற்கு அந்த இனத்தின் எண்ணிக்கை குறையாமல் இருக்கவேண்டும். அதேபோல் அந்த இனம் வாழ்ந்த பிரதேசமும் பறிபோகாமல் இருக்கவேண்டும் என்பதை இவர்கள் நன்குணர்ந்துகொள்ளும் வரை தமிழனின் தலை விதியை எவராலும் மாற்றவே முடியாது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com