மு.க ஸ்டாலின் வீட்டை முற்றுகையிட்டனர் வருமானவரித்துறை அதிகாகரிகள்.
இலங்கைக்கு எதிரான குற்றச்சாட்டுக்களை சுமத்தி, இந்தியாவில் முன்னெடுக்கப்படும் முயற்சிகளை தொடர்ந்து, கருணாநிதியின் திமுக கட்சியில் உட்பூசல்கள் ஏற்பட்டுள்ளன. குடும்ப பிரச்சினைகளும் தலைதூக்கியுள்ளன. கருணாநிதியின் புதல்வர்களில் ஒருவரான மு.க. ஸ்டாலினுக்கு எதிராக ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மத்திய புலனாய்வு துறை அதிகாரிகள், வருமான வரித்துறை அதிகாரிகள், ஸ்டாலினின் வீட்டை இன்று சோதனையிட்டனர். 20 கோடி ரூபா பெறுமதியான ஆடம்பர காரொன்றை வரி ஏய்ப்பு செய்து, ஸ்டாலினின் புதல்வரும், நடிகருமான உதயநிதி ஸ்டாலின் இறக்குமதி செய்துள்ளதாக, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, இதனையடுத்து இந்திய வருமானத்துறை அதிகாரிகள் ஸ்டாலின் மற்றும் அவரது செயலாளரின் வீட்டை இன்று சோதனையிட்டனர்.
எதிர்க்கட்சி மற்றும் ஆளுந்தரப்பு உள்ளிட்ட பல்வேறு தரப்புகள் விடுத்த கடும் அழுத்தங்கள் காரணமாக, ஸ்டாலின் வீட்டில் வருமான வரித்துறை மேற்கொண்ட சோதனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளதாக, பிந்திக்கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இந்திய மத்திய அமைச்சரவையில் திமுக சார்பில் அங்கம் வகித்த மு.க. அழகிரிக்கும், ஸ்டாலினுக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது. இந்திய மத்திய அரசிலிருந்து திமுக விலகியதற்கு, ஸ்டாலின் பின்னணியிலிருந்து செயற்பட்டதாக, அழகிரி கருதுவதாக, தமிழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதனால், நேற்று திமுகவின் அமைச்சர்கள் ராஜினாமா கடிதங்களை ஒப்படைப்பதற்காக சென்றபோது, குழுக்களாக பிரிந்து சென்று கடிதங்களை ஒப்படைத்துள்ளனர். முதலில் முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையிலான மூவர் ராஜினாமா கடிதங்களை கையளிக்க, அதன் பின்னர் இரண்டு மணித்தியாலங்கள் தாமதித்து, அழகிரியும், நெப்போலியனும் இராஜினாமா கடிதங்களை கையளித்தனர். இது, திராவிட முன்னேற்ற கழகத்தில் உட்கட்சி பூசல்கள் ஏற்படடுள்ளதை சுட்டிக்காட்டுவதாக, இந்திய அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment