51 இணையத்தளங்களுக்கு இலங்கையில் தடை
வயது குறைந்தவர்களின் ஆபாச படங்கள் உள்ளடக்கிய 51 ஆபாச இணையத்தளங்களை தடைசெய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பத்தர முல்லையிலுள்ள சிறுவர் நீதி மன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். அவ்வாறான இணையத்தளங்களை தடைச்செய்வதற்கு தேவையான சட்ட ஆலோசனைகளை சட்டமா அதிபரிடம் பெற்றுக்கொள்ளுமாறும் நீதவான் எம்.எம்.ஜயசேகர உத்தரவிட்டுள்ளார்.
சட்டமா அதிபரின் ஆலோசனையை பெற்று அது தொடர்பிலான அறிக்கையை ஏப்ரல் மாதம் 03 ஆம் திகதி நீதிமன்றத்திற்கு சமர்ப்பிக்குமாறும் அவர் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு பணித்துள்ளார். இவ்வாறான ஆபாச இணையத்தளங்கள் இலங்கையிலிருந்து இயக்கப்படுகின்றனவா? என்பது தொடர்பிலும் தேடியறியுமாறும் நீதவான் பணித்துள்ளார்.
0 comments :
Post a Comment