மக்களுக்கு கஞ்சிக்கு வழியில்லை! வவுனியா த.தே.கூ தலைவரின் வீட்டுக்கு காபெட்டு வீதி.
இலங்கையில் இன்று அதிகமாக பேசப்படும் வார்த்தைகள் போர்க்குற்றம், வறுமை, அபிவிருத்தி என்பவை. இந்த மூன்று விடயங்களுக்கும் காரணகர்த்தாக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பு அல்லது இந்த மூன்றையும் வைத்தே தமிழ் தேசியக் கூட்டமைப்பு காலத்தை கடத்துகின்றது என்றால் நீங்கள் எவரும் மறுதலிக்க மாட்டீர்கள்.
இந்நிலையில் இன்றைய அபிவிருத்திப் பணிகளில் வேகமாக அபிவிருத்தி அடைந்து வரும் இடமாக வவுனியாவை குறிப்பிடலாம். A9 (யாழ் வீதி), மன்னார் வீதி என்று பலதரப்பட்ட பாதைகள் அபிவிருத்தி செய்யப்பட்டு வந்தாலும் வவுனியா நகர்ப்பகுதி மிக மோசமான நிலையில் காணப்படுகின்றது.
நகர்ப்பகுதிக்குள்ளேயே வாகன போக்குவரத்து மிக அசௌகரிய நிலையை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக முதலாம், இரண்டாம் குறுக்குத்தெருக்கள் மற்றும் கந்தசாமி கோயில் வீதி என்பன கைவிடப்பட்ட நிலையில் இருக்கின்றது என்றுதான் கூறவேண்டும்.
இவ்வளவு மோசமான நிலையில் இவ் வீதிகள் இருக்க நகரசபை தலைவரான திரு.கனகையா தன் வீட்டுக்குச் செல்லும் திருநாவற்குளம் 3ம் ஒழுங்கையை தார் விதியாக கடந்த இரு தினங்களாக அமைத்து வருகின்றார்.
திருநாவற்குளம்கிராமத்துக்குச் செல்ல ஐந்து வீதிகள் காணப்படுகின்ற போதும் இவ்வீதி மட்டும் புனரமைக்கப்படுகின்றமை ஏற்றுக்கொள்ளக்கூடியதா? மேலும் குருமன்காடு பகுதியில் இருந்து ஓயார்சின்னக்குளம் பகுதி வரை நகர சபை எல்லைக்கு உட்பட்டிருக்கின்றது. அந்த விதி குருமன்காடு, திருநாவற்குளம், தாண்டிக்குளம், பத்தினியார்மகிழங்குளம், ஓயார்சின்னக்குளம் ஆகிய கிராமங்களைக் கடந்து கல்மடு சென்று அங்கிருந்து துணுக்காய், மல்லாவி செல்கிறது. ஆனால் அத்தகைய முக்கிய வீதி புனரமைக்கப்படாமல் பாரபட்சம் பார்க்கப்படுகின்றது. கிட்டத்தட்ட குருமன்காடு - தாண்டிக்குளம் வீதிA9 வீதிக்கு நிகராக பாவிக்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது.
மக்களின் வாக்குகளில் பதவிகளை பெற்றுக்கொண்டு அந்த பதவிகளை வைத்து மக்களின் வாழ்வியலை மேம்படுத்துவதை சூட்சுமாக தடுத்து தங்களது சுகபோக வாழ்விற்காக அரச இயந்திரத்தை பயன்படுத்தும் இவர்களை மக்கள் எப்போது விரட்டியடிப்பார்கள்?
சித்தன்
1 comments :
This what the Ex-Fed party,Tamil Arasu Kadchchi were doing and the present TNA is doing.Behind the curtain it was something just front of the curtain something well prepared in order to catch the poor innocent voters.(Hiththa Hontha Gani Niththarama bading)
Post a Comment