பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணம் ஊடகங்களாம்...!
குற்றம் சுமத்துகிறார் பியஸிரி வஜேநாயக்க
பொருட்களின் விலை அதிகரிப்புக் காரணம் ஊடகங்கள் எனவும், பொருட்களின் விலை அதிகரித்துச் செல்வதாயின் அதனை குறைப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டியது ஊடகங்களின் பொறுப்பாகும் என தேசிய சுதந்திர முன்னணியைச் சேர்ந்த பியஸிரி விஜேநாயக்க குறிப்பிடுகிறார்.
நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தனது கட்சியின் மூலம் பொருளாதாரத்தை நசுக்குவோர் பற்றி முழு நாட்டுக்கும் அறியக் கொடுத்திருப்பதாகவும், பொருட்களின் விலை அதிகரித்துச் செல்வதாயின் விலையைக் குறைப்பதற்கான வழிவகைகளைச் செய்ய வேண்டியது ஊடகவியலாளர்களின் பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டார்.
(கேஎப்)
0 comments :
Post a Comment