Friday, March 22, 2013

எந்தவொரு நபரையும் சர்வதேச நீதிமன்றில் நிறுத்த முடியாது! -தேசிய ஒற்றுமை அமைப்பு

இந்நாட்டின் எந்தவொரு நபரையும் சர்வதேச நீதிமன்றத்தின் முன் கொண்டுசெல்வதற்கு இடமளிக்கப்பட மாட்டாது எனவும், யாரேனும் ஒருவர் அவ்வாறு செய்வதற்கு முற்பட்டால் அதற்காகத் உயிர்நீத்தேனும் நாட்டைக் காப்பதற்கு முன்நிற்பதாகவும் தேசிய ஒற்றுமை அமைப்பைச் சேர்ந்த பெங்கமுவே நாலக்க தேரர் குறிப்பிட்டார்.

‘அமெரிக்கா எங்களுக்குப் பெரிதல்ல. முதுகெலும்பை நேரே வைத்திருக்குமாறு நாங்கள் ஜனாதிபதிக்கு சொல்கிறோம்.’ இவ்வாறு நேற்று (21), ஜெனீவாவில் இலங்கைக்கெதிராகக் கொணரப்பட்டுள்ள பிரேரணைகளுக்கு எதிரான பேரணியில் கலந்து உரையாற்றும்போதே தேரர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தேசிய ஒற்றுமை அமைப்பினால் நேற்று அமெரிக்க தூதரகத்தின் முன்பாக இப்பேரணி நிகழ்வுற்றது.

‘ஈரானில், ஆப்கானிஸ்தானில் ஆயிரக்கணக்கான மக்களை கொன்றொழித்தார்கள்.’, பாகிஸ்தானில், லிபியாவில் ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தார்கள்’, ஐநாவில் உரிமைச் சான்றிதழ் பெற்றுக் கொண்டு ஒபாமாக்கள் இரத்ததை ஓட்டுகிறார்கள்’, ‘இரத்தத்தை ஓட்டுவதற்காக அதிகாரம் அளிக்கின்ற ஐநா போதனை செய்கிறது’ முதலிய பதாதைகளை ஏந்தியவண்ணம் கொள்ளுப்பிட்டி லிபார்ட்டி பிலாஸா சினிமா ‘தியேட்டரு’க்கு முன்பாக இருந்து அமெரிக்க தூதுவராலயம் வரை பாதசாரியாக பேரணி சென்றது.

குணதாச அமரசேக்கர, வசந்த பண்டார முதலிய தேசிய ஒற்றுமை அமைப்பின் உறுப்பினர் உள்ளிட்ட பொதுமக்கள் அநேகர் நிகழ்வில் கலந்துகொண்டனர். பொலிஸாரின் இடைஞ்சலுக்கு மத்தியிலும் அமெரிக்க தூதுவராலயம் வரை சென்ற பேரணியின் ஒருங்கிணைப்பாளர் குணதாச அமரசேக்கர குறிப்பிடும்போது, அமெரிக்காவாயினும் ஐநாவாயினும் ஏதேனும் பொருத்தமற்ற பிரேரணைகளை முன்வைத்தால் அதனை இந்நாட்டு ஜனாதிபதி நிராகரிக்க வேண்டும். நாட்டில் பலம்பொருந்திய அமைப்பொன்றை உருவாக்கி நாட்டுக்கு எதிரான சக்திகளுக்கு எதிராக செயற்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

(கேஎப்)

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com