கல்லடி புதிய பாலத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச திறந்து வைத்தார்.
இலங்கையின் மிகப் பெரிய வாவியான மட்டக்களப்பு வாவியில் மஹிந்த சிந்தனையின் வழிகாட்டலில் 1970 மில்லியன் (170 கோடி) ரூபா செலவில் 289 மீற்றர் நீளமும் 14மீற்றர் அகலமும் கொண்டதாக நிர்மாணிக்கப்பட்ட கல்லடி புதிய பாலத்தை இன்று(22.03.2013) வெள்ளிக்கிழமை 04.30 மணிக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
கிழக்கையும் தெற்கையும் இணைக்கும் மட்டக்களப்பு கல்லடி புதிய பால திறப்பு விழா நிகழ்வில் துறைமுகங்கள் மற்றும் நெடுஞ்சாலைகள் திட்ட அமைச்சர் நிர்மல கொத்தலாவல, இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் நொபுஹித்தோ ஹோபோ, கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் ஏ அப்துல் மஜீத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் மிக நீள இரும்புப் பாலம் என்று அழைக்கப்படும் கல்லடி பாலம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்னர் ஆங்கிலேயர் ஆட்சியில் இந்த பாலம் 50 வருட கால உத்தரவாதத்தின் பேரில் நிர்மாணிக்கப்பட்ட போதும் 75 ஆண்டுகளுக்கு மேல் இரும்புப்பாலம் பாவனையிலுள்ளதுடன் இந்த பாலம் தற்போது சேதமடைந்து வருவதனாலேயே அதன் அருகில் புதிய பாலம் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment