சமூகங்களிடையே முரண்பாடா? பேசித்தீர்ப்போம்..
அம்பாறை மாவட்டத்தில் சமூகங்களுக்கிடையே அமைதியையும், ஒற்றுமையையும் வலியுறுத்தும் வண்ணம், மாவட்ட செயலாளர் நீல் டி அல்விஸ் தலைமையில் கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், அமைச்சர்களான ரவூப் ஹகீம், ஏ.எல்.எம. அதாஉல்லா, பீ. தயாரட்ன, பராளுமன்ற உறுப்பினர்களான எம்.ரீ. ஹஸன் அலி, சரத் வீரசேகர, பைஸல் காஸிம், எச்.எம்.எம். ஹரீஸ், மாகாண அமைச்சர்கள, மாகாண சபை உறுப்பினர்கள், பௌத்த மற்றும் முஸ்லிம் சமய தலைவர்களும், பாதுகாப்பு அதிகாரிகளும், கலந்து கொண்டுள்ளனர்.
இக்கலந்துரையாடலின்போது, பொத்துவில் மண்மலை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்படவிருந்த குறிப்பிட்ட நிர்மாணப் பணிகளுக்கு பதிலாக, மத்தியஸ்தர் குழுவினால் சிபாரிசு செய்யப்படும் பகுதியில் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ள வேண்டுமென, இரு தரப்பினருக்கும் இடையே இணககம் காணப்பட்டது.
0 comments :
Post a Comment