கிழக்கிற்கு 4000 வீடுகாளாம்! கூறுகின்றார் முரளிதரன்.
மட்டக்களப்பு வின்சன்ட் தேசிய மகளிர் பாடசாலையில், ஆரம்ப பிரிவு பாடசாலை கட்டிடம் அமைத்தல், அடிப்படை வசதிகள், உட்கட்டமைப்பு, பௌதீக வளங்கள் அபிவிருத்தி பற்றிய கலந்துரையாடலில், கலந்து கொண்டு உரையாற்றிய பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன், கிழக்கு மாகாணத்தில் இந்திய அரசின் நிதிஉதவியுடன், 300 கோடி ரூபா செலவில், 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பின்தங்கிய பிரதேசங்களில் இந்திய அரசின் உதவியுடன், 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்;படவுள்ளன. இதற்கென, 300 கோடி ரூபா செலவிடப்படும். இவ்வீட்டுத்திட்டத்தில், திருகோணமலை மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளும், அம்பாறை மாவட்டத்தில் ஆயிரம் வீடுகளும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 2 ஆயிரம் வீடுகளும் நிர்மாணிக்கப்படவுள்ளன. மட்க்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 6 பிரதேச செயலக பிரிவுகளான வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுனதீவு, கிரான், செங்கலடி, வாகரை, ஆகிய பகுதிகளில் வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதாகவும், அவர் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment