Monday, March 4, 2013

உயிரிழந்த கர்ப்பிணியின் வயிற்றிலிருந்து உயிருடன் மீட்கப்பட்ட சிசு

அமெரிக்காவின் புரூக்ளின் நகரில் வாழும் 21 வயது இளம்தம்பதியர், தங்களின் தலைமகன் பிரசவத்திற்காக காரில் சென்றபோது கணவனும் மனைவியும் சாலை விபத்தில் மரணமடைந்த, பின்னர் ஆண் குழந்தை பிறந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

தாய்மையடைந்த பெண்ணிற்கு வீட்டில் பிரசவ வலி எடுக்கவே கணவர் ஒரு டாக்சியில் அவரை ஏற்றிக்கொண்டு புரூக்ளினில் உள்ள வைத்தியசாலையை நெருங்கிக்கொண்டிருந்தபோது, எதிர் திசையில் வந்த கார், டாக்சியில் மோதி விபத்துக்குள்ளானது தகவல் அறிந்து விரைந்து வந்த பொலிசார் தம்பதியரையும், டாக்சி டிரைவரையும் வைத்தியசாலையில் அனுமதித்தனர். வரும் வழியிலேயே தம்பதியரின் உயிர் பிரிந்துவிட்டதாக கூறிய வைத்தியர்கள், அந்த பெண்ணின் வயிற்றில் ஆபரேஷன் செய்து உள்ளேயிருந்த அழகான ஆண் குழந்தையை வெளியே எடுத்தனர்.

குழந்தை நல்ல ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும், கதகதப்பிற்காக இன்குபேட்டரில் வைத்து பராமரித்து வருவதாகவும் வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்ததுடன் விபத்தில் படுகாயமடைந்த டாக்சி டரைவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன் டாக்சி மீது மோதிய காரின் டிரைவரை தலைமறைவானதால் பொலிசார் அவரை தேடி வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com