சுகாதார அமைச்சர்- பிரதிப் பொலிஸ் மா அதிபர் களன் மகன்களின் வழக்கு 8ஆம்திகதிக்கு ஒத்திவைப்பு
மட்டக்களப்பு மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் வைத்தியங்காரவின் மகன் அசேல தாக்கப்பட்டமை தொடர்பிலான வழங்கு விசாரணை இம்மாதம் 08ம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கடந்த பெப்ரவரி 24ம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திலிபால சிறிசேனவின் மகனுக்கும், பிரதிப் பொலிஸ்மா அதிபர் வைத்தியங்காரவின் மகன் ஆகியோருக்குமிடையிலாக கைகலப்பு வாழைச்சேனை பாசிக்குடாவில் இடம் பெற்றிருந்தது. இதுதொடர்பிலான வழக்கு விசாரணைகள் திங்கட்கிழமை வாழைச்சேனை நீதவான் நிதிமன்ற பதில் நீதிபதி வினோபா இந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போதே இந்த வழங்கு விசாரணைகள் எதிர்வரும் 8ம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டது. சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் தஹம் சிறிசேனவும் நீதிமன்றில் ஆஜராகியருந்தமை குறிப்பிடத்தக்கது.
சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவில் மகன் சார்பாக பிரதி அமைச்சர் பைஸர் லலித் திசாநாயக்க, என்.எம்.சஹீட் உட்பட சுமார் 15 சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இக் கைகலப்பு சம்பவத்தில் சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகனுடன் 15க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு வைத்திய அறிக்கையின் பின்னர் உடனடியாக பொலிஸ் பிணை வழங்கப்பட்டிருந்தது. இருப்பினும், பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மகள் கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் தம் மீது தாக்குதல் நடத்திய சுகாதார அமைச்சரின் மகன் மது போதையில் இருந்தார் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment